Home
Mobile

அடுத்த Vivo போன் ரெடி.. IP68 ரேட்டிங்.. Dimensity சிப்செட்.. எந்த மாடல்? என்ன விலை?

விவோ நிறுவனம் ஏற்கனவே விவோ டி4, விவோ டி4எக்ஸ், விவோ டி4 அல்ட்ரா மற்றும் விவோ டி4 லைட் ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு விவோ டி சீரிஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தற்போது ஆன்லைனில் வெளியான தகவலின்படி, விவோ நிறுவனம் விவோ டி4ஆர் (Vivo T4R) எனும் ஸ்மார்ட்போன் மாடலையும் அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது.

விவோ டி4ஆர் அம்சங்கள் (Vivo T4R specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 7400 (MediaTek Dimensity 7400) சிப்செட் உடன் இந்த புதிய விவோ டி4ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் இந்த அசத்தலான விவோ போன் வெளிவரும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த Vivo போன் ரெடி.. எந்த மாடல்? என்ன விலை?

தற்போது விவோ டி4ஆர் ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும். பின்பு ரூ.20,000-க்கு கீழ் இந்த விவோ டி4ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ டி4 5ஜி (Vivo T4 5G) போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

விவோ டி4 5ஜி அம்சங்கள் (Vivo T4 5G Specifications): 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (FHD+ AMOLED display) உடன் இந்த விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2392x1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் பல அம்சங்கள் உள்ளன.

அதேபோல் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் (Snapdragon 7s Gen 3 chipset) வசதியுடன் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) பேஸ்டு ஆண்ட்ராய்டு 15 ஒஎஸ் (Android 15) மூலம் இந்த போன் இயங்கும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

குறிப்பாக 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் உடன் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் மூலம் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் 7300mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் ஒரே சார்ஜில் 2 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. MIL-STD-810H -மிலிட்டரி கிரேடு ஷாக் ரெசிஸ்டன்ஸ் ஆதரவு இந்த போனில் உள்ளது.

அதுவும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) வசதி விவோ டி4 5ஜி போனில் உள்ளது. மேலும் இந்த போனின் எடை 199 கிராம் ஆகும். எமரால்டு பிளேஸ் (Emerald Blaze) மற்றும் பாண்டம் கிரே (Phantom Grey) நிறங்களில் இந்த விவோ போனை வாங்க முடியும்.

பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported speaker), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), வசதி இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், க்ளோனாஸ், பீடோ, யூ.எஸ்.பி டைப்-சி உள்ளிட் பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. தற்போது இந்த விவோ டி4 5ஜி போன் ரூ.21,999 விலையில் வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo T4R may launch in India soon: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X