அதிர போகுது ஆர்டர்.. ரூ.20,000 பட்ஜெட்ல சோனி கேமரா.. AMOLED டிஸ்பிளே.. வருகிறது புது Vivo போன்.. எந்த மாடல்?
விவோ டி4ஆர் 5ஜி (Vivo T4R 5G) ஸமார்ட்போனை வரும் ஜூலை 31-ம் தேதி அறிமுகம் செய்ய விவோ நிறுவனம். அதுவும் இந்த புதிய ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு ஆன்லைனில் கசிந்த இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
விவோ டி4ஆர் 5ஜி அம்சங்கள் (Vivo T4R 5G specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 7400 சிப்செட் (MediaTek Dimensity 7400 chipset) வசதியுடன் இந்த விவோ டி4ஆர் 5ஜி போன் வெளியாகும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

அதேபோல் 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் குவாட் கர்வ்ட் அமோலெட் (quad-curved AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய விவோ டி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1800 நிட்ஸ் பிரைட்னஸ், 2160ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் (2,160Hz PWM dimming), எச்டிஆர் 10 பிளஸ், 300 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வதியுடன் விவோ டி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த விவோ ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய விவோ டி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.
IP68/69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் விவோ டி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் விவோ டி4ஆர் 5ஜி போனில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 மெயின் கேமரா + 2எம்பி bokeh கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் இந்த புதிய விவோ டி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த விவோ போனில் உள்ளன.
அதேபோல் 5700mAh பேட்டரி வசதியுடன் விவோ டி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் இந்த போனில் உள்ளது. இந்தியாவில் விவோ டி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.20,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








