Home
Mobile

ஆஃபரில் Vivo 5ஜி போன்.. 5700mAh பேட்டரி.. 50எம்பி சோனி கேமரா.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?

விவோ நிறுவனத்தின் விவோ டி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது தற்போது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. குறிப்பாக 50எம்பி டூயல் ரியர் கேமரா, 5700எம்ஏஎச் பேட்டரி, டைமன்சிட்டி சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

தற்போது பிளிப்கார்ட்டில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ டி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 2 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.22999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை ரூ.20,999 விலையில் வாங்கிவிட முடியும்.

ஆஃபரில் Vivo 5ஜி போன்.. 5700mAh பேட்டரி.. எந்த மாடல்?

விவோ டி4ஆர் 5ஜி அம்சங்கள் (Vivo T4R 5G Specifications): 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் குவாட் கர்வ்ட் அமோலெட் (quad-curved AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய விவோ டி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1800 நிட்ஸ் பிரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 7400 சிப்செட் (MediaTek Dimensity 7400 chipset) வசதியுடன் இந்த விவோ டி4ஆர் 5ஜி போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது.

50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் + 2எம்பி கேலக்ஸிகோர் ஜிசி02எம்1 சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த விவோ போன். மேலும் ஆரா லைட் (Aura light) மற்றும் 4கே வீடியோ பதிவு ஆதரவு உள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இதுதவிர பல அசத்தலான அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

விவோ டி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) மூலம் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் ( In-display Fingerprint Sensor)வசதி இந்த போனில் உள்ளது.

ஆஃபரில் Vivo 5ஜி போன்.. 5700mAh பேட்டரி.. எந்த மாடல்?

விவோ டி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் 5700mAh பேட்டரி வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers),5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளது.

IP68 + IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த புதிய விவோ போன் வெளிவந்துள்ளது. மேலும் விவோ டி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது MIL-STD-810H இராணுவ தர சான்றிதழ் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் பாதுகாப்பு வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo T4R 5G with 8GB RAM available at 2 percent discount on Flipkart: Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X