Home
Mobile

ஜூலை 31-க்கு குறிச்சாச்சு.. QUAD டிஸ்பிளே.. SONY கேமரா.. 7.3 எம்எம் ஸ்லிம்.. AURA லைட்னிங்.. எந்த மாடல்?

இந்தியாவின் ஸ்லிம்மஸ்ட் குவாட் கர்வ்ட் டிஸ்பிளே மாடலாக விவோ நிறுவனத்தின் விவோ டி4ஆர் 5ஜி (Vivo T4R 5G) களமிறங்க இருக்கிறது. இந்த புதிய போனின் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு முக்கிய பீச்சர்களிலும் மார்கெட்டில் கசிந்துள்ளன. இந்த விவோ டி4ஆர் 5ஜி மாடலின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

* ஸ்லிம்மஸ்ட் குவாட் கர்வ்ட் டிஸ்பிளே
* சோனி சென்சார் மெயின் கேமரா
* 7.3 எம்எம் தடிமன் பாடி
* டைமன்சிட்டி 7400 சிப்செட்

ஜூலை 31-க்கு குறிச்சாச்சு.. QUAD டிஸ்பிளே.. SONY கேமரா.. 7.3 எம்எம்!

இப்போது, மார்கெட்டில் குவாட் கர்வ்ட் டிஸ்பிளே (Quad Curved Display) மாடல்கள் மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கே கிடைக்கின்றன. இதனால், ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த மாடல்களை போட்டிப்போட்டு கொண்டு களமிறக்கி வருகின்றன. இதில் விவோ நிறுவனம் வெறும் 7.3 எம்எம் தடிமனில் விவோ டி4ஆர் 5ஜி போனை கொண்டு வருகிறது.

இந்த போனின் அதிகாரப்பூர்வ டிசைன் மற்றும் கலர்களுடன் வெளியீட்டு தேதியும் இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜூலை 31ஆம் தேதி இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே, பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) ஆர்டருக்கு வர இருப்பதும் உறுதியாவிட்டது. டூயல் ரியல் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) + ஆரா லைட் (Aura Light) கிடைக்கிறது.

ஒயிட் மற்றும் ப்ளூ ஆகிய கலர்கள் கொண்ட மாடல்கள் போஸ்டர் மூலம் உறுதியாகி இருக்கிறது. இதில் ஸ்லிம்மஸ்ட் குவாட் கர்வ்ட் டிஸ்பிளே, டூயல் கேமரா மற்றும் கலர் விவரங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்ட பீச்சர்களாகும். மற்ற பீச்சர்கள் வெளியாகவில்லை. இருப்பினும், வழக்கம்போல மார்கெட்டில் முக்கிய பீச்சர்கள் கசிந்துள்ளன.

விவோ டி4ஆர் 5ஜி அம்சங்கள் (Vivo T4R 5G Specifications): குவாட் கர்வ்ட் டிசைனில் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. நான்கு புறமும் கர்வ்ட் டிசைன் கிடைப்பதால், வீடியோ அனுபவம் புதுவிதமாக எதிர்பார்க்கலாம். மீடியாடெக் டைமன்சிட்டி 7400 (MediaTek Dimensity 7400) சிப்செட் கிடைக்க இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா வர இருக்கிறது.

இதில் சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் கிடைக்க இருக்கிறது. இந்த ரியர் கேமரா மற்றும் செல்பீ ஷூட்டரில் 4K வீடியோ ரெக்கார்டிங் வர இருக்கிறது. லேட்டஸ்ட் மாடல்களில் கிடைக்கும் IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்க இருக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதிதான்.

மேலும், வழக்கமாக கிடைக்கும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். மேற்கண்ட பீச்சர்கள் மட்டுமே மார்கெட்டில் கசிந்துள்ளன. விலை விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், முந்தைய மாடல்களின் விலை மற்றும் இதன் பீச்சர்களை பார்க்கையில் ஒரு முடிவுக்கு வர முடிகிறது.

ரூ.21,000 பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது. ஆரம்ப விலை அதைவிட கம்மியான பட்ஜெட்டில் இருக்கலாம். உண்மையில் ஜூலை 31ஆம் தேதிக்கு குறைவான நாட்களே இருக்கின்றன. ஆகவே, ஓரிரு நாட்கள் அதிகாரப்பூர்வ பீச்சர்கள் உறுதி செய்யப்படும் என்பதில் சந்தேமில்லை. குவாட் கர்வ்ட் டிஸ்பிளே பிரியர்களுக்கு இந்த மாடல் பக்கா ஆப்ஷாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo T4R 5G To Launch India on July 31 Coming to sale on Flipkart Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X