இந்த Vivo 5ஜி போனுக்கு இந்தியாவே வெயிட்டிங்! சோனி கேமரா.. IP68 ரேட்டிங்.. எந்த மாடல்? என்ன விலை?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ டி4ஆர் 5ஜி (Vivo T4R 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் வரும் ஜூலை 31-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. அதுவும் இந்த போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவரும். இந்நிலையில் விவோ டி4ஆர் 5ஜி போனின் அறிமுகத்திற்கு முன்பு சில முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
விவோ டி4ஆர் 5ஜி அம்சங்கள் (Vivo T4R 5G specifications): 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் குவாட் கர்வ்ட் அமோலெட் (quad-curved AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய விவோ டி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1800 நிட்ஸ் பிரைட்னஸ், 2160ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் (2,160Hz PWM dimming), எச்டிஆர் 10 பிளஸ், 300 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

விவோ டி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போனில் தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 7400 சிப்செட் (MediaTek Dimensity 7400 chipset) வசதியுடன் இந்த விவோ டி4ஆர் 5ஜி போன் வெளியாகும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வதியுடன் விவோ டி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த விவோ ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய விவோ டி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.
IP68/69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் விவோ டி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் விவோ டி4ஆர் 5ஜி போனில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவோ டி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 மெயின் கேமரா உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் இந்த புதிய விவோ டி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த விவோ போனில் உள்ளன.
5700mAh பேட்டரி வசதியுடன் விவோ டி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் இந்த போனில் உள்ளது. ஆன்லைனில் வெளியான தகவலின்படி இந்த விவோ டி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.20,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய விவோ போன் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








