வந்துட்டேன்.. 7.39 மிமீ ஸ்லிம் டிசைன்.. பக்காவான பட்ஜெட்டில் புது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
விவோ (Vivo) நிறுவனம் கூடிய விரைவில் ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த போவதை உறுதிப்படுத்தி உள்ளது. அது விவோ டி4ஆர் 5ஜி (Vivo T4R 5G) மாடல் ஆகும். எப்போது அறிமுகம்? என்னென்ன அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன? என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? என்ன விலைக்கு வரும்?
இந்த ஸ்மார்ட்போனிற்கான பேனர் விளம்பரம் ஆனது இது மிகவும் ஸ்லிம் ஆன டிசைனை கொண்டிருக்கும் என்பதை காட்டுகிறது. மேலும் அறிமுகத்திற்கு பின்னர் இது பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வாங்க கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் பேனர் விளம்பரத்தின்படி, நாட்டில் தற்போது வாங்க கிடைக்கும் குவாட் கர்வ்டு டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன்களுடன் (Quad curved display phones) ஒப்பிடும் போது இது மிக மெல்லியதாக இருக்கும்.

இது தவிர, விவோ டி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் பேனர் விளம்பரம் ஆனது, பேக் பேனில் ஒப்பீட்டளவில் தட்டையான கேமரா ஐலேண்ட்டை (Flat Camera Island) கொண்டிருக்கும் என்பதையும் வெளிப்படுத்தி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அளவீட்டில் 7.39 மிமீ தடிமனாக இருக்கும். ஆனால் விவோ டி4ஆர் ஜி ஸ்மார்ட்போனின் விலையையோ அல்லது சரியான வெளியீட்டு தேதியையோ (Vivo T4R 5G Launch Date) விவோ நிறுவனம் வெளியிடவில்லை.
இருப்பினும் சமீபத்தில், விவோ டி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் (Vivo T4R 5G Price) ஆன்லைனில் லீக் ஆகி இருந்தது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,000 முதல் ரூ.20,000 க்குள் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது விவோ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை விவோ டி4எக்ஸ் 5ஜி (Vivo T4x 5G) மற்றும் விவோ டி4 5ஜி (Vivo T4 5G) ஆகிய 2 ஸ்மார்ட்போன்களுக்கு இடையில் வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
நினைவூட்டும் வண்ணம் மேற்கண்ட ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.13,999 மற்றும் ரூ.21,999 என்கிற விலைக்கு இந்தியாவில் அறிமுகம் ஆகின. ஆக விவோ டி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.15,000 - ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வரும் என்று எதிர்பார்ப்பது நியாயம் தான்.
எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை விவோ டி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் (Vivo T4R 5G Specifications Expected) ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 7400 சிப்செட் (MediaTek Dimensity 7400 SoC) மூலம் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. இது ஐபி68 + ஐபி69 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ரேட்டிங்களுடன் (IP68 + IP69 water and dust resistance ratings) வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (Vivo T4 5G Specifications):
- 6.77-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் மற்றும் 2-மெகாபிக்சல் லென்ஸ்
- 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்
- 7,300mAh பேட்டரி
விவோ டி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (Vivo T4x 5G Specifications):
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.72-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட்
- டூயல் கேமரா செட்டப்
- 50எம்பி ப்ரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார்
- 8எம்பி செல்பீ கேமரா
- ஏஐ ஏரேசர் உட்பட பல ஏஐ கேமரா அம்சங்கள்
- 30 fps இல் 4K வீடியோ ரெக்கார்டிங்
- பெரிய 6,500mAh பேட்டரி - 44W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங்


Click it and Unblock the Notifications








