பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனை.. 5700mAh பேட்டரி.. IP69 ரேட்டிங்.. ஆஃபரில் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் பிளிப்கார்ட் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2026 (Flipkart Great Republic Day Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதேபோல் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விவோ டி4ஆர் 5ஜி (Vivo T4R 5G) போனும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
பிளிப்கார்ட் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ டி4ஆர் 5ஜி போனுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.20,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை ரூ.19,999 விலையில் வாங்கிவிட முடியும்.

விவோ டி4ஆர் 5ஜி அம்சங்கள் (Vivo T4R 5G Specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7400 சிப்செட் (MediaTek Dimensity 7400 chipset) வசதியுடன் இந்த விவோ டி4ஆர் 5ஜி போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது.
அதேபோல 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் குவாட் கர்வ்ட் அமோலெட் (quad-curved AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய விவோ டி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1800 நிட்ஸ் பிரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவோ போன் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் + 2எம்பி கேலக்ஸிகோர் ஜிசி02எம்1 சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. மேலும் ஆரா லைட் (Aura light) மற்றும் 4கே வீடியோ பதிவு ஆதரவு உள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இதுதவிர பல அசத்தலான அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
குறிப்பாக ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) மூலம் இந்த விவோ டி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் ( In-display Fingerprint Sensor)வசதி இந்த போனில் உள்ளது.
அதுவும் IP68 + IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த புதிய விவோ போன் வெளிவந்துள்ளது. மேலும் விவோ டி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது MIL-STD-810H இராணுவ தர சான்றிதழ் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் பாதுகாப்பு வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.
விவோ டி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் 5700mAh பேட்டரி வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது.யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers),5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளது.


Click it and Unblock the Notifications








