SALE பிச்சிக்குது.. வெறும் ரூ.17,499 பட்ஜெட்ல QUAD டிஸ்பிளே.. 5700mAh பேட்டரி.. 50MP கேமரா.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் டிஸ்கவுண்ட் போக விவோ டி4ஆர் 5ஜி (Vivo T4R 5G) போனின் விற்பனை தொடங்கிவிட்டது. 3டி கர்வ்ட் டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, IP69 ரேட்டிங் ரெசிஸ்டன்ட், 44W ஃபாஸ்ட் சார்ஜிங், பெரிய 5700mAh பேட்டரி போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த விவோ டி4ஆர் 5ஜி போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இதுவொரு மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொண்ட மாடலாக இருக்கிறது. ஏனென்னறால், MIL-STD-810H சர்டிபிகேஷன் மட்டுமல்லாமல், IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. மேலும், குவாட் கர்வ்ட் டிஸ்பிளே டிசைனில் ஸ்காட் சென்சேஷன் (SCHOTT Xensation) புரொடெக்சன் கொடுக்கிறது.

மூன்று வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ.17,499ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ.21,499ஆகவும் இருக்கிறது. அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ.23,499ஆக இருக்கிறது. இதில் உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்தால் ரூ.2,000 உடனடி பேங்க் டிஸ்கவுண்ட் போக ஆர்டர் செய்து கொள்ளலாம். ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலை ரூ.17,499 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ள முடியும். எச்டிஎப்சி கிரெடிட் கார்டு, ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு இருந்தால், ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்கும் கஸ்டமர்களுக்கு ரூ.2,000 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. பழைய மாடல்களுக்கு எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. குவாட் கர்வ்ட் டிஸ்பிளேவில் பிரீமியம் லுக் கொடுக்கும்படி ஆர்டிக் ஒயிட் (Arctic White) மற்றும் ட்வைலைட் ப்ளூ (Twilight Blue) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்யலாம்.
விவோ டி4ஆர் 5ஜி அம்சங்கள் (Vivo T4R 5G Specifications): ஸ்காட் சென்சேஷன் புரொடெக்சன் கொண்ட 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) குவாட் கர்வ்ட் அமோலெட் (Quad Curved AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஃபுல்எச்டி ரெசொலூஷன், எச்டிஆர்10பிளஸ் கிடைக்கிறது.
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு பன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 4nm) எஸ்ஓசி கிடைக்கிறது. இந்த சிப்செட்டுக்கு ஏற்ப மாலி ஜி615 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது. 5700mAh பேட்டரி மற்றும் அதற்கு 44W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கிறது.
இந்த விவோ டி4ஆர் 5ஜி போனில் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி செகண்டரி கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப் வருகிறது. மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் வருகிறது. செகண்டரி கேமராவி் கேலக்ஸிகோர் சென்சார் கிடைக்கிறது. அதேபோல 32 எம்பி செல்பீ கேமராவிலும் கேலக்ஸிகோர் சென்சார் உள்ளது.


Click it and Unblock the Notifications








