சம்பவம் உறுதி.. விவோ டி4 அல்ட்ரா வருது.. 3டி கர்வ் டிஸ்பிளே.. 100X ஜூமிங்.. 50MP டெலிபோட்டோ.. எந்த மாடல்?
மிட்-ரேஞ்ச் செக்மெண்ட்டில் பெரிஸ்கோப் டெலிபோட்டோவுடன் கூடிய பிரீமியம் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம், 100X டிஜிட்டல் ஜூமிங், 3டி கர்வ்ட் டிஸ்பிளே மற்றும் நைட் போட்டோகிராபிக்காக ஆரா எல்இடி போன்ற பீச்சர்களுடன் விவோ டி4 அல்ட்ரா (Vivo T4 Ultra) வெளியாக இருக்கிறது. இப்போது, விவோ நிறுவனம் டீசர் மூலம் அதை உறுதி செய்துள்ளது. இந்த போனில் என்னென்ன பீச்சர்களை எதிர்பார்க்கலாம்.
விவோ நிறுவனமானது, அதன் எஸ்க் (X) தள பக்கத்தில் விவோ டி4 அல்ட்ரா போனின் டீசரை வெளியிட்டு இருக்கிறது. இந்த டீசரில் அந்த போனின் டிசைன் மற்றும் கேமரா விவரங்கள் உறுதியாகி இருக்கிறது. அதேபோல டிஸ்பிளே விவரங்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது. ஆகவே, டி3 அல்ட்ரா போனைவிட பெரிய ஆரா லைட்டை (Auro Light) பார்க்க முடிகிறது.

அதேபோல டெலிபோட்டோ கேமரா இதில் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. இந்த டெலிபோட்டோ கேமராவிலேயே 100X டிஜிட்டல் ஜூமிங் வர இருக்கிறது. இதுபோக மெயின் கேமரா மற்றும் செகண்டரி கேமரா உறுதியாகி இருக்கிறது. ஆகவே, டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் வர இருக்கிறது. டிஸ்பிளேவில் கர்வ்ட் டிசைன் தெரிகிறது. ஆகவே, 3டி கர்வ்ட் அமோலெட் எதிர்பார்க்கலாம்.
ஒட்டுமொத்த டிசைனும் கிட்டத்தட்ட விவோ டி3 அல்ட்ரா மாடலை போலவே இருக்கிறது. டெலிபோட்டோ மற்றும் ஆரா லைட் மட்டும் அப்கிரேட் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த விவோ டி4 அல்ட்ரா போனின் விற்பனை பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் நடக்கும் என்பதையும் விவோ இந்தியா நிறுவனம் உறுதி செய்துள்ளது. பிளிப்கார்ட் தளத்திலும் லைவ் பேஜ் ஓப்பன் செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட விவரங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டவை. இப்போது, சிப்செட், ஓஎஸ் போன்ற மற்ற கசிந்த பீச்சர்களை பார்ப்போம். இந்த பீச்சர்கள் டெக் டிப்ஸ்டர் யோகேஷ் ப்ரார் (Yogesh Brar) அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில் 6.7 இன்ச் பிஓஎல்இடி டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்க இருக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 9300 சீரிஸ் சிப் கிடைக்க இருக்கிறது.
சோனி ஐஎம்எக்ஸ்921 (SONY IMX921) சென்சார் கொண்ட 50 எம்பி பிரைமரி கேமரா கிடைக்கிறது. அதேபோல 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்க இருக்கிறது. ஃபன்டச்ஓஸ் 15 (FunTouch OS 15) பேஸ்டு ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) வருகிறது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட பேட்டரி கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்களுடன் ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது.
இப்போது, விவோ டி3 அல்ட்ரா போனில் என்னென்ன பீச்சர்கள் கிடைத்தது என்பதை தெரிந்து கொள்ளலாம். டி3 அல்ட்ரா போனிலும் 3டி கர்வ்ட் டிஸ்பிளே கிடைத்தது. இந்த டிஸ்பிளேவில் 4500 பீக் பிரைட்ன்ஸ், ஃபுல்எச்டிபிளஸ் ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைத்தது. இந்த டிஸ்பிளேவுக்கு ஸ்காட் எக்ஸ்என்சேஷன் கவர் கிளாஸ் புரொடெக்சன் கிடைத்தது.
ஆகவே, டி4 அல்ட்ரா போனுக்கும் டிஸ்பிளே புரொடெக்சன் கிடைக்க வாய்ப்புள்ளது. அதேபோல கேமராவில் ஜீஸ் ஆப்டிக்ஸ் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், டி3 அல்ட்ரா போனிலேயே அது இருந்தது. அதேபோல ஓஐஎஸ் டெக்னாலஜி கிடைக்கலாம். 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5500mAh பேட்டரியை டி3 அல்ட்ரா கொடுத்தது. இதைவிட அதிக ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பேட்டரி கேபாசிட்டியை டி4 அல்ட்ராவில் எதிர்பார்க்கலாம்.
விவோ டி3 அல்ட்ரா போனானது, ரூ.31,999 பட்ஜெட்டில் வெளியாகியது. ஆகவே, இந்த விவோ டி4 அல்ட்ரா மாடலானது, மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வெளியாவது உறுதியாகும். அதேபோல ரூ.35,000 பட்ஜெட்டில் ஆரம்ப விலை இருக்கலாம். டீசர் வெளியாகிவிட்டதால், அடுத்தடுத்து பீச்சர்கள் வெளியாக வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தியாவில் விவோ நிறுவனத்தின் டி சீரிஸ்களுக்கு வரவேற்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








