வெச்சி செஞ்சிட்டாங்க.. மிட்-ரேஞ்ச் பட்ஜெட்ல 100X ஜூமிங்.. 10X மேக்ரோ.. SONY கேமரா.. 3D டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் முதல்முறையாக 10X டெலிபோட்டோ மேக்ரோ ஜூம் மட்டுமல்லாமல், 100X டிஜிட்டல் ஜூம், 3X பெரிஸ்கோப் ஜூம் கேமரா கொண்ட மாடலாக விவோ டி4 அல்ட்ரா (Vivo T4 Ultra) களமிறங்க இருக்கிறது. இதுபோக ஓஐஎஸ் டெக்னாலஜி, ஈஐஎஸ் டெக்னாலஜி, மீடியாடெக் டைமன்சிட்டி 9300பிளஸ் சிப்செட் போன்ற பீச்சர்களையும் கொடுக்கிறது. இப்போது, வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல பட்ஜெட் செக்மெண்ட்டும் உறுதியாகி இருக்கிறது. இதுகுறித்த விவரங்களை பார்க்கலாம்.
கேமரா பிரியர்களுக்கு ஏற்ற மாடலாக இந்த விவோ டி4 அல்ட்ரா வெளியாக இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டு, ஏற்கனவே இந்திய மார்கெட்டில் வெளியாவது உறுதியாகியது. இப்போது, வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜூன் 11ஆம் தேதி இந்த விவோ டி4 அல்ட்ரா வெளியாக இருக்கிறது.

அதேபோல ரூ.40,000 பட்ஜெட் செக்மெண்ட்டில் வெளியாக இருப்பதையும், விவோ நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.39,999 பட்ஜெட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது, விவோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ள பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
விவோ டி4 அல்ட்ரா அம்சங்கள் (Vivo T4 Ultra Specifications): இந்த விவோ போனில் பிரீமியமான டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்க இருக்கிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமராவானது, சோனி ஐஎம்எக்ஸ்921 (SONY IMX921) சென்சார் மற்றும் சிஐபிஏ 4.5 இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (CIPA 4.5 Image Stabilization) டெக்னாலஜி கிடைக்கிறது.
விவோ எக்ஸ்200 ப்ரோ போனில் கிடைத்த பயோனிக் ஸ்பெக்ட்ரம் (Bionic Spectrum) கிடைக்க இருக்கிறது. 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. 50 எம்பி பெரிஸ்கோப் கேமராவானது, சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சாருடன் வருகிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கிடைக்கிறது.

அதேபோல எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Electronic Image Stabilization) டெக்னாலஜி மற்றும் 10X டெலிபோட்டோ மேக்ரோ கிடைக்கிறது. இந்த செக்மெண்ட்டில் 10X மேக்கோ கொண்ட முதல் மாடலாக விவோ டி4 அல்ட்ரா இருக்கிறது. மேலும், 3X ஆப்டிகல் ஜூமிங் மற்றும் 100X டிஜிட்டல் ஜூமிங் சப்போர்ட் கிடைக்கிறது.
ஆகவே, இந்திய கேமரா பிரியர்கள் விரும்பும்படி அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களை கொடுக்கிறது. அதேபோல பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300பிளஸ் எஸ்ஓசி (Octa Core MediaTek Dimensity 9300+ SoC) கிடைக்க இருக்கிறது. இது அன்டுடு ஸ்கோரில் 2 மில்லியன் பாய்ன்ட்களை பெற்றிருக்கிறது.
இந்த கேமரா மற்றும் சிப்செட் பீச்சர்களை மட்டுமே உறுதி செய்துள்ளது. அதேபோல டிசைனில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே மற்றும் ஆரா லைட் வருவதை உறுதி செய்துள்ளது. பிளாக் உள்பட 2 கலர்களில் வெளியாக இருக்கிறது. இந்த மற்ற பீச்சர்கள் மார்கெட்டில் வெளியாகி இருக்கின்றன. ஆகவே, ஃபன்டச்ஓஸ் 15 (FunTouch OS 15) எதிர்பார்க்கலாம்.
அதேபோல ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைப்பது உறுதியாகும். மேலும், 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5500mAh பேட்டரி வர வாய்ப்புள்ளது. 50 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கலாம். 6.7 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் ரெசொலூஷன் வர இருக்கிறது. IP69 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications








