வச்சான் பாரு விவோ.. 100X ஜூமிங் கேமரா, Vivo AI அம்சங்களுடன் புதிய ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?
விவோ (Vivo) நிறுவனம் அதன் வி50 சீரீஸின் கீழ் புதிய எலைட் எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த கையோடு, இந்திய சந்தையில் இன்னொரு புதிய ஸ்மார்ட்போனை "விரைவில்" அறிமுகம் செய்யவுள்ளது. அது விவோ டி4 அல்ட்ரா (Vivo T4 Ultra) ஸ்மார்ட்போனாகும்
இந்தியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ டி4 (Vivo T4) மற்றும் விவோ டி4எக்ஸ் (Vivo T4x) மாடல்களை தொடர்ந்து, கடந்த ஆண்டு அறிமுகமான விவோ டி3 அல்ட்ரா (Vivo T3 Ultra) ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் வெர்ஷன் ஆக இந்த போன் வருகிறது. விவோ டி4 அல்ட்ராவின் சரியான வெளியீட்டு தேதி தற்போது வரை வெளியிடப்படவில்லை (எப்படி பார்த்தாலும் இந்த மாதத்திற்குள் அறிமுகமாகி விடும்).

விவோ பிராண்ட் பகிர்ந்துள்ள டீஸர் கிளிப் ஆனது, விவோ டி4 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் ஓவல் வடிவ கேமரா யூனிட் வடிவமைப்பைக் காட்டுகிறது. அதற்குள் டூயல் ரியர் கேமரா சென்சார்கள் உள்ளது மற்றும் ஒரு எல்இடி ரிங்கும் உள்ளது. இதில் 100எக்ஸ் ஜூம் திறன்களை கொண்ட பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் இடம்பெறும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த விவோ ஸ்மார்ட்போனின் மூலைகளில் வட்டமான எட்ஜ்களுடன் கூடிய பாக்ஸி சேஸியும் () உள்ளது. ஸ்மார்ட்போனின் வலது பக்கம் வால்யூம் ராக்கர் உள்ளது. இந்த போன் விவோ ஏஐ அம்சங்களுடன் வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. விவோ டி4 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இந்தியாவில் இது என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படும்?
எக்ஸ் தளம் வழியாக டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் லீக் செய்த விவரங்களின்படி விவோ டி4 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் pOLED டிஸ்பிளேவை கொண்டு இருக்கலாம். இந்த ஸ்மார்ட்போனை மீடியாடெக் டைமன்சிட்டி 9300 (MediaTek Dimensity 9300) சீரீஸ் கொண்டு இயக்கப்படலாம்.
இது கடந்த ஆண்டு அறிமுகமான விவோ டி3 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் உள்ள டைமன்சிட்டி 9200+ சிப்செட்டை விட ஒரு ஜெனெரஷன் மேம்படுத்தலாகும். ஆக இது நிச்சயம் குறிப்பிடத்தக்க செயல்திறன் மேம்பாடுகளைக் கொண்டுவரும். கேமராக்களை பொறுத்தவரை விவோ டி4 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 50MP சோனி IMX921 ப்ரைமரி கேமரா மற்றும் 50MP பெரிஸ்கோப் லென்ஸை கொண்டிருக்கலாம். முன்பக்க கேமரா சென்சார் பற்றிய விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளன.
ஓஎஸ்-ஐ பொறுத்தவரை விவோ டி4 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான பன்டச் ஓஎஸ் 15 (FunTouch OS 15) கஸ்டம் ஸ்கின் (அவுட் ஆப் பாக்ஸ்) உடன் வர வாய்ப்புள்ளது. பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை இது 90W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டு இருக்கலாம், இது பழைய மாடலில் உள்ள 80W பாஸ்ட் சார்ஜிங்கை விட ஒரு சிறிய மேம்படுத்தலாகும்.
விவோ டி4 அல்ட்ரா ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? இந்த ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் இன்னும் லீக் ஆகவில்லை என்றாலும், விவோ டி3 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது ரூ.31,999 என்கிற ஆரம்ப விலையில் இந்தியாவில் அறிமுகமானது என்பதை கருத்தில் கொண்டால் விவோ டி4 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது எப்படி பார்த்தாலும் ரூ.35,000 க்கும் குறைவான விலை வரம்பில் தான் வைக்கப்படும். இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் பிளிப்கார்ட் வழியாக கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக அறிமுகமான விவோ டி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.78-இன்ச் 1.5கே AMOLED டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி 9200+ சிப்செட், OIS உடனான 50எம்பி சோனி IMX921 ப்ரைமரி சென்சார், 8எம்பி வைட்-ஆங்கிள் லென்ஸ் ரியர் கேமரா, 50எம்பி செல்பீ கேமரா, 5500mAh பேட்டரி, 80W பிளாஷ் சார்ஜிங் தொழில்நுட்பம், ஐபி68 ரேட்டிங் ஆகியவைகளை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








