Home
Mobile

கொஞ்சம் பொறுங்க.. 50எம்பி சோனி கேமரா.. 6000mAh பேட்டரி.. இந்தியாவுக்கு வரும் புது Vivo போன்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தனது புதிய விவோ டி4 அல்ட்ரா (Vivo T4 Ultra) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது ஜூன் 11-ம் தேதி மதியம் 12 மணி அளவில் இந்த புதிய விவோ போன் அறிமுகமாகும். மேலும் இந்த புதிய போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த புதிய போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

விவோ டி4 அல்ட்ரா அம்சங்கள் (Vivo T4 Ultra specifications): 6.67-இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய விவோ டி4 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே வசதியுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கொஞ்சம் பொறுங்க.. இந்தியாவுக்கு வரும் புது Vivo போன்.. எந்த மாடல்?

அதேபோல் இந்த போனின் பின்புறம் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்921 பிரைமரி சென்சார் (Sony IMX921 primary sensor), 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா உள்ளன. எனவே இந்த இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். பின்பு 10X டெலிஃபோட்டோ மேக்ரோ ஜூம் ஆதரவு மற்றும் பல அம்சங்களைக் கொண்டுள்ளன இந்த ரியர் கேமராக்கள்.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா உடன் இந்த புதிய விவோ டி4 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ போன்.

ஃபன்டச்ஓஎஸ் 15 (FuntouchOS 15) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் இந்த புதிய விவோ டி4 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இயங்கும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வசதியுடன் இந்த விவோ போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 9300 சீரிஸ் சிப்செட் (MediaTek Dimensity 9300 series chipset) வசதியுடன் விவோ டி4 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் ஆப் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த புதிய விவோ போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் IP64 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6000mAh பேட்டரி வசதியுடன் விவோ டி4 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.35,000-க்கு கீழ் இந்த புதிய விவோ டி4 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு இருக்கும்.

Best Mobiles in India

English summary
Vivo T4 Ultra specifications and price leaked ahead of June 11 launch: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X