ஜூன் வரை காத்திருப்போம்.. 50எம்பி கேமரா.. 90W சார்ஜிங்.. வருகிறது புது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
கடந்த ஏப்ரல் மாதம் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது விவோ நிறுவனம். இந்நிலையில் விவோ டி4 அல்ட்ரா (Vivo T4 Ultra) எனும் ஸ்மார்ட்போன் மாடலையும் அறிமுகம் செய்ய உள்ளது விவோ நிறுவனம். அதாவது டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் வெளிட்ட தகவலின்படி, வரும் ஜூன் மாத தொடக்கத்தில் இந்த புதிய விவோ டி4 அல்ட்ரா அறிமுகமாகும்.
குறிப்பாக இந்த விவோ டி4 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மாடலும் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும். அதேபோல் இந்த புதிய விவோ போனின் விவரக்குறிப்புகள் தற்போது ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.

விவோ டி4 அல்ட்ரா அம்சங்கள் (Vivo T4 Ultra Specifications): 6.67-இன்ச் பிஒஎல்இடி (pOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த விவோ டி4 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்இ 2000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 9300 சீரிஸ் (MediaTek Dimensity 9300 series) சிப்செட் வசதியுடன் புதிய விவோ போன் வெளிவரும். எனவே இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதுவும் இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்921 மெயின் சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமராக்கள் இந்த விவோ டி4 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும். அதேபோல் பல ஏஐ அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த விவோ போனில் உள்ளன. அதேபோல் இந்த சாதனத்தில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் ( In-display Fingerprint Sensor) வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவோ டி4 ஸ்மார்ட்போன் ஆனது 7300mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த விவோ டி4 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மாடலுக்கு 7000mAhபேட்டரி அல்லது 7500mAh பேட்டரி உடன் வெளிவர வாய்ப்பு உள்ளது. பின்பு இந்த புதிய பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஃபன்டச்ஓஎஸ் 15 (FuntouchOS 15) மூலம் இந்த விவோ டி4 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இயங்கும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் ஐபி69 ரேட்டிங் உடன் இந்த புதிய விவோ போன் வெளிவரும்.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் விவோ டி4 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் உள்ளன. அதேபோல் இந்த புதிய விவோ போன் ரூ.30,000-க்கு கீழ் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








