ஆரம்பமே ஆஃபர்.. இன்று விற்பனைக்கு வரும் புதிய Vivo 5ஜி போன்.. சோனி கேமரா.. 90W சார்ஜிங்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் சமீபத்தில் விவோ டி4 அல்ட்ரா (Vivo T4 Ultra) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இன்று முதல் முறையாக இந்த புதிய விவோ போன் விற்பனைக்கு வருகிறது. பிளிப்கார்ட் மற்றும் மற்றும் விவோ இந்தியா இ-ஸ்டோர் வழியாக மதியம் 12 மணிக்கு இந்த புதிய விவோ ஸ்மார்ட்போனை வாங்க முடியும். இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட விவோ டி4 அல்ட்ரா போனின் விலை ரூ.37,999-ஆக உள்ளது. மேலும் இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.39,999 விலையிலும், 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.41,999 விலையிலும் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.3000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை இன்று குறைந்த விலையில் வாங்க முடியும்.

விவோ டி4 அல்ட்ரா அம்சங்கள் (Vivo T4 Ultra specifications): 4என்எம் ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9300 பிளஸ் எஸ்ஒசி (4nm octa-core MediaTek Dimensity 9300+ SoC) சிப்செட் உடன் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
குறிப்பாக 6.67-இன்ச் குவாட் கர்வ்ட் அமோலெட் (quad-curved AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த விவோ டி4 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1,260x2,800 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 300 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 2160ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் (2,160Hz PWM dimming) எச்டிஅர் 10 பிளஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
விவோ டி4 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஃபன்டச்ஓஎஸ் 15 (FuntouchOS 15) மூலம் இயங்குகிறது. மேலும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் விவோ டி4 அல்ட்ரா ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்.
50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்921 மெயின் சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமராக்களை கொண்டுள்ளது இந்த விவோ டி4 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
அதேபோல் ஏஐ நோட்ஸ் அசிஸ்ட் (AI Note Assist), ஏஐ எரைஸ் (AI Erase), ஏஐ டிரான்ஸ்கிரிப்ட் அசிஸ்ட் (AI Transcript Assist), ஏஐ கால் டிரான்ஸ்லேஷன் (AI Call Translation), சர்க்கிள் டு சர்ச் (Circle to Search) உள்ளிட்ட பல ஏஐ அம்சங்கள் விவோ டி4 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் உள்ளது. இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display optical fingerprint sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.
IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் விவோ டி4 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers)உள்ளிட்ட வசதிகளும் இந்த போனில் உள்ளன. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
குறிப்பாக 5500mAh பேட்டரி உடன் விவோ டி4 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.ஃபீனிக்ஸ் கோல்ட் ( Phoenix Gold) மற்றும் மீடியோர் கிரே (Meteor Grey) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








