Home
Mobile

வெச்சான் பாரு Vivo.. ரூ.3,000 ஆஃபர் விலையில் 5500mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

மீடியாடெக் டைமன்சிட்டி 9300+ சிப்செட் மட்டுமல்லாமல், அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, 5500mAh பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வெளியான விவோ டி4 அல்ட்ரா 5ஜி (Vivo T4 Ultra 5G) ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி கிடைக்கிறது.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 12 சதவீத தள்ளுபடி விலைக்கு 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.37,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு கூடுதலாக ரூ.3,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.34,999 விலைக்கு இந்த விவோ டி4 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

வெச்சான் பாரு Vivo.. ரூ.3,000 ஆஃபர் விலையில் 5500mAh பேட்டரி.. மாடல்?

விவோ டி4 அல்ட்ரா 5ஜி அம்சங்கள் (Vivo T4 Ultra 5G Specifications): எப்/1.88 அபெர்சர், சோனி ஐஎம்எக்ஸ்921 (SONY IMX921) சென்சார் மற்றும் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + எப்/2.2 அபெர்சர், கேலக்ஸிகோர் ஜிசி08ஏ8 (Galaxycore GC08A8) சென்சார் கொண்ட 8 எம்பி அல்ட்ரா வைடு கேமராவை இந்த விவோ டி4 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.

மேலும், சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார், எப்/2.55 அபெர்சர், 15 செ.மீ மேக்ரோ கொண்ட 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. 3x சென்சார் ஜூம் மற்றும் 100x ஹைப்பர் ஜூம் கொடுக்கிறது. மொத்தமாக 4K வீடியோ ரெக்கார்டிங் கொடுத்துள்ளது. எப்/2.45 அபெர்சர், 4K ரெக்கார்டிங்குடன் 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.

இந்த கேமராவுக்கு கேலக்ஸிகோர் ஜிசி32ஈ1 (Galaxycore GC32E1) சென்சார் கிடைக்கிறது. ஸ்காட் எக்ஸென்சேஷன் கவர் கிளாஸ் (SCHOTT Xensation Cover Glass) மற்றும் 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.78 இன்ச் (2800 x 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை இந்த விவோ டி4 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது.

மேலும், 480Hz டச் சாம்பிளிங் ரேட், 5500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிஆர்1பிளஸ் (HDR10+) சப்போர்ட் கிடைக்கிறது. இம்மார்டலிஸ் ஜி720 ஜிபியு (Immortalis G720 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9300+ 4என்எம் (Octa Core MediaTek Dimensity 9300+ 4nm) சிப்செட்டை கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது.

ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) கொடுக்கப்பட்டு உள்ளது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5500mAh பேட்டரியை இந்த விவோ டி4 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. இந்த பேட்டரியுடன் 7.45 எம்எம் தடிமன் மற்றும் 192 கிராம் எடை உள்ளது. கலர்களுக்கு ஏற்ப தடிமன் மற்றும் எடை மாறுகிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொடுக்கிறது.

மேலும், டைப்-சி ஆடியோ (Type C audio) மற்றும் இன் டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சாரை (In-display optical fingerprint sensor) கொடுத்து இருக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் இந்த விவோ டி4 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது. பீனிக்ஸ் கோல்டு மற்றும் கிரே கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Vivo T4 Ultra 5G With 50MP Camera Gets Rs 3000 Bank Discount on Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X