Home
Mobile

பிளிப்கார்ட் பிச்சிக்குது.. 15 சதவீத ஆஃபரில் 6500mAh Vivo 5G போன்.. AMOLED டிஸ்பிளே.. SONY கேமரா.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் நடந்துவரும் சாசா லேலே சேல் என்னும் சிறப்பு விற்பனையில் குவாட் கர்வ்டு அமோலெட் டிஸ்பிளே கொண்ட விவோ டி4 ப்ரோ 5ஜி (vivo T4 Pro 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. டிஸ்பிளே மட்டுமல்லாமல், சோனி சென்சாருடன் பெரிஸ்கோப் கேமரா மற்றும் 6500mAh சிலிக்கான் கார்பன் பேட்டரி கிடைக்கிறது.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 15 சதவீத தள்ளுபடி விலைக்கு 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.27,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், ரூ.1,250 தள்ளுபடியானது தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.26,749 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

பிளிப்கார்ட் பிச்சிக்குது.. 15 சதவீத ஆஃபரில் 6500mAh Vivo 5G போன்!

விவோ டி4 ப்ரோ அம்சங்கள் (vivo T4 Pro specifications): 6.77- இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (FHD+) குவாட் கர்வ்டு அமோலெட் டிஸ்பிளே (AMOLED Display) கிடைக்கிறது. 1080 x 2392 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 5000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 1500 நிட்ஸ் குளோபல் பீக் ப்ரைட்னஸ் கொடுத்துள்ளது.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 எஸ்ஓசி (Octa Core Snapdragon 7 Gen 4 SoC) கிடைக்கிறது. டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்ட மாடலாக இருக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா உள்ளது. இதில் சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் கிடைக்கிறது. மேலும், 50 எம்பி டெலிபோட்டோ கேமரா உள்ளது.

இந்த பெரிஸ்கோப் கேமராவுக்கு சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் மற்றும் 3எக்ஸ் ஜூம் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 2 எம்பி பொக்கே கேமராவை இந்த விவோ டி4 ப்ரோ ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 32 எம்பி செல்பீ கேமராவை கொடுக்கிறது. ஏஐ ப்ரொபெஷனல் போர்ட்ராய்டு, ஏஐ எரைஸ் 3.0 மற்றும் ஏஐ மேஜிக் மூவ் பீச்சர்கள் உள்ளன.

மேலும், ஏஐ இமேஜ் எக்ஸ்பாண்டர், ஏஐ போட்டோ என்ஹான்ஸ் உள்ளிட்ட பீச்சர்களையும் இந்த கேமரா கொடுத்துள்ளது. பிரீமியம் டியூரபிலிட்டி கொடுக்க ஐபி68 மற்றும் ஐபி69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. மிட்-ரேஞ்ச் மாடலாக இருப்பதால், இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சாரை கொடுத்து இருக்கிறது.

10லேயர் விசி கூலிங் சிஸ்டம் கொண்ட பேட்டரி சிஸ்டம் கிடைக்கிறது. 90W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6500mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரியை கொடுத்துள்ளது. இந்த பேட்டரியுடன் 7.53 மிமீ தடிமன் மற்றும் 192 கிராம் எடையில் வாங்கி கொள்ள கிடைக்கிறது. ஏஐ கேப்ஷன்ஸ், ஏஐ ஸ்மார்ட் கால் அசிஸ்டண்ட் உள்ளிட்ட ஏஐ பீச்சர்களும் வருகின்றன.

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி கனெக்டிவிட்டிகளையும் இந்த விவோ டி4 ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. நைட்ரோ ப்ளூ (Nitro Blue) மற்றும் பிளேஸ் கோல்டு (Blaze Gold) ஆகிய கலர்களில் வாங்கி கொள்ளலாம். ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த விவோ டி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கும் கஸ்டமர்களுக்கு 4 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் கொடுக்கப்படும். மேலும், 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களும் கொடுக்கப்படும். கேமரா, பேட்டரி மற்றும் டிஸ்பிளேவில் பக்கா பீச்சர்களுடன் கிடைப்பதை மறுக்க முடியாது.

Best Mobiles in India

English summary
vivo T4 Pro with 6500mAh battery available at 15 percent discount on Flipkart Sasa Lele Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X