அதிருது இந்திய மார்க்கெட்.. அடுத்த Vivo 5ஜி போன் ரெடி.. ஸ்னாப்டிராகன் சிப்செட்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ டி4 ப்ரோ (Vivo T4 Pro) ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது தற்போது இந்த போனின் டீசரை வெளியிட்டுள்ளது விவோ நிறுவனம். வரும் வாரங்களில் இந்த புதிய போன் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் பிளிப்கார்ட் தளத்தில் விவோ டி4 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்.
விவோ டி4 ப்ரோ அம்சங்கள் (Vivo T4 Pro Specifications): தரமான ஸ்னாப்டிராகன் ஜென் 4 சிப்செட் (Snapdragon 7 Gen 4 chipset) சிப்செட் உடன் விவோ டி4 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

அதேபோல் ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் விவோ டி4 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த விவோ போன். தற்போது விவோ டி4 ப்ரோ ஸ்மார்ட்போனின் சில விவரங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும். மேலும் ஏற்கனவே வெளியான விவோ டி3 ப்ரோ போனின் அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
விவோ டி3 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Vivo T3 Pro 5G Specifications): ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 எஸ்ஓசி (Snapdragon 7 Gen 3 SoC) சிப்செட் கொண்டுள்ளது விவோ டி3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் அட்ரினோ 7120 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது
குறிப்பாக 6.77 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே (3D Curved AMOLED Display) உடன் விவோ டி3 ப்ரோ 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் 1,080 x 2,392 பிக்சல்ஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
அதுவும் ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) சார்ந்த ஆண்ட்ராய்டு 14(Android 14) இயங்குதள வசதியுடன் இந்த புதிய விவோ டி3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் 2 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் 3 வருடங்களுக்குப் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
50எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 882 பிரைமரி கேமரா (50MP Sony IMX 882 primary camera) + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது விவோ டி3 ப்ரோ 5ஜி ஸமார்ட்போன். மேலும் 16எம்பி செல்பி கேமராவும் இதில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் உதவியுடன் சினிமாடிக் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

அதேபோல் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விவோ டி3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. சாண்ட்ஸ்டோன் ஆரஞ்ச் (Sandstone Orange) மற்றும் எம்ரால்டு கிரீன் (Emerald Green) நிறங்களில் நிறங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) கொண்டுள்ளது இந்த விவோ போன்.
5500mAh பேட்டரி விவோ டி3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போன். IP64 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) கொண்டுள்ளது இந்த சாதனம். மேலும் இதன் எடை 184 கிராம் ஆகும். தற்போது இந்த விவோ டி3 ப்ரோ 5ஜி போன் ரூ.22,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








