ஆக.26-க்கு அப்புறம் இதுதான்.. 6500mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. SONY கேமரா.. புது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் விவோ டி4 ப்ரோ 5ஜி (Vivo T4 Pro 5G) அதன் பட்ஜெட் செக்மெண்ட்டின் முதல் 3X பெரிஸ்கோப் ஜூமிங் கொண்ட மாடலாக வெளியாக இருக்கிறது. இப்போது, ஒட்டுமொத்த கேமரா பீச்சர்களும் உறுதியாகி இருக்கிறது. சோனி சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கொடுக்கிறது. இந்த விவோ டி4 ப்ரோ 5ஜி போனின் முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும் என்பதை விவோ நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் பட்ஜெட் செக்மெண்ட்டில் 3X பெரிஸ்கோப் சென்சார் கொடுக்கும் மாடலாக இருக்கப்போகிறது. முழு கேமரா பீச்சர்கள் பிரீமியமாக இருக்கின்றன.

விவோ டி4 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Vivo T4 Pro 5G Specifications): 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கொண்ட கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. 3ஆவதாக ஒரு லென்ஸ் கிடைக்கிறது. மெயின் கேமராவில் சோனி சென்சார் (Sony Sensor) மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கிடைக்கிறது.
அதேபோல டெலிபோட்டோ கேமராவில் சோனி சென்சார் வருகிறது. இதுபோக 3X பெரிஸ்கோப் ஜூமிங் மற்றும் 10X டிஜிட்டல் ஜூமிங் கிடைக்க இருக்கிறது. இதுவொரு போர்ட்ராய்டு கேமரா மாடலாக இருக்கிறது. ஆகவே, அதற்கு ஏற்ப ஏஐ மற்றும் எடிட்டிங் பீச்சர்களை எதிர்பார்க்கலாம். இந்த விவோ டி4 ப்ரோ 5ஜி போனில் 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.
மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 எஸ்ஓசி (Snapdragon 7 Gen 4 SoC) கிடைக்க இருக்கிறது. இந்த விவோ டி4 ப்ரோ 5ஜி போனில் ப்ளூ (Blue) மற்றும் கோல்டு (Gold) கலர்கள் வருகின்றன. இந்த பீச்சர்களை மட்டுமே அதிகாரப்பூர்மாக உறுதியாகி இருக்கிறது. இருப்பினும், டிஸ்பிளே, பேட்டரி போன்ற பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துவிட்டன.
ஆகவே, இந்த விவோவில் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6500mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்போன்ற பீச்சர்கள் கிடைக்க இருக்கின்றன. முன்னதாக வெளியான விவோ டி4 5ஜி போனின் விலை ரூ.21,999 பட்ஜெட்டில் கிடைத்தது.
ஆகவே, இந்த டி4 ப்ரோ 5ஜி போனை ரூ.26,999 பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியும். மேலும், விவோ டி4 5ஜி போனில் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7300mAh பேட்டரி கிடைக்கிறது. 6.77 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 (Octa Core Snapdragon 7s Gen 3) சிப்செட் கொடுக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கிடைக்கிறது.
இதிலும் சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சாருடன் 50 எம்பி கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. MIL-STD-810H சர்டிபிகேஷன் கொண்ட மிலிட்டரி கிரேடு புரொடெக்சன் மற்றும் IP65 ரேட்டிங் கிடைக்கிறது. இந்த பீச்சர்களில் கேமரா அப்கிரேட் செய்யப்பட்ட டி4 ப்ரோ போனில் கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications








