ஆஃபரை வாரி வழங்கும் பிளிப்கார்ட்.. Vivo 5ஜி போனை வாங்க சரியான நேரம்.. சோனி கேமரா.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தொடர்ந்து தரமான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் மற்ற நிறுவனங்களை விட அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் விவோ நிறுவனம் போன்களை அறிமுகம் செய்வதால் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் விவோ நிறுவனத்தின் 5ஜி போன் ஒன்று தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
அதாவது தற்போது பிளிப்கார்ட் தளத்தில் 8ஜிபி ரேம் மறறும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ டி4 ப்ரோ 5ஜி (vivo T4 Pro 5G) ஸ்மார்ட்போன் மாடலுக்கு 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.27,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.3000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை ரூ.24999 விலையில் வாங்கிவிட முடியும்.

விவோ டி4 ப்ரோ அம்சங்கள் (vivo T4 Pro 5G Specifications): ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட் (Snapdragon 7 Gen 4 SoC) சிப்செட் உடன் விவோ டி4 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.
அதேபோல் 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் குவாட்-கர்வ்டு AMOLED டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய விவோ டி4 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080 × 2392 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5000 நிட்ஸ் லோக்கல் பீக் ப்ரைட்னஸ், 1500 நிட்ஸ் க்ளோபல் பீக் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.
குறிப்பாக ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான பன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) மூலம் விவோ டி4 ப்ரோ ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு 4 வருட முக்கிய ஓஎஸ் அப்டேட் மற்றும் 6 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
அதுவும் ப்ரீ இண்ஸ்டால்டு கூகுள் ஜெமினை ஆப், ஜெமினி லைவ் மற்றும் பிற ஏஐ அம்சங்கள், ஏஐ கேப்ஷன்ஸ், ஏஐ ஸ்மார்ட் கால் அசிஸ்டண்ட், ஏஐ ஸ்பேம் கால் ப்ரொடெக்ஷன் ஏஐ ப்ரொபெஷனல் போர்ட்ரெயிட், ஏஐ ஏரேஸ் 3.0, ஏஐ மேஜிக் மூவ், ஏஐ இமேஜ் எக்ஸ்பாண்டர், ஏஐ போட்டோ என்ஹான்ஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த புதிய விவோ போனில் உள்ளன.
விவோ டி4 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50 மெகாபிக்சல் சோனி IMX882 பிரைமரி சென்சார் + எக்ஸ் ஜூம் ஆதரவுடன் 50 மெகாபிக்சல் சோனி IMX882 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா + 2 மெகாபிக்சல் பொக்கே கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவந்துள்ளது.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. அதேபோல் IP68 மற்றும் IP69 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு மதிப்பீடுகள், இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், வெப்பச் சிதறலுக்கான 16,470 சதுர மிமீ 10-அடுக்கு வீசி கூலிங் சிஸ்டம் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.
இந்த விவோ டி4 ப்ரோ ஸ்மார்ட்போன் 6500mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி உடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, 4ஜி, வைஃபை 6, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி ஆதரவு உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த விவோ போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications








