Home
Mobile

ஆகஸ்ட் 26 வரை எந்த போனும் வாங்காதீங்க.. சோனி கேமரா.. 6500mAh பேட்டரி.. வருகிறது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தனது புதிய விவோ டி4 ப்ரோ 5ஜி (Vivo T4 Pro 5G) ஸ்மார்ட்போனை வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதுவும் இந்த புதிய விவோ போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். மேலும் இந்த விவோ டி4 ப்ரோ 5ஜி போனின் படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

விவோ டி4 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Vivo T4 Pro 5G Specifications): பன்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) உடன் விவோ டி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அதுவும் 6.7-இன்ச் ஒல்இடி டிஸ்பிளே (OLED display) இதில் உள்ளது. மேலும் இந்த டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 26 வரை எந்த போனும் வாங்காதீங்க.. வருகிறது Vivo 5ஜி போன்..

தரமான ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட் (Snapdragon 7 Gen 4 chipset) உடன் விவோ டி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போனின் வீடியோ எட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 டெலிபோட்டோ (Sony IMX882 telephoto) கேமரா + மெயின் கேமரா + அல்ட்ரா வைடு கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்பட் உடன் விவோ டி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் ஆதரவும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு ஆரா லைட் யூனிட் (Aura Light unit) ஆதரவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த புதிய விவோ போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.

ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு விவோ டி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் மேம்பட்ட ஏஐ அம்சங்கள் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போனில் உள்ளன.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி விவோ டி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் IP68 & IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த விவோ போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் 26 வரை எந்த போனும் வாங்காதீங்க.. வருகிறது Vivo 5ஜி போன்..

6500mAh பேட்டரி வசதியுடன் விவோ டி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதி இந்த புதிய விவோ போனில் உள்ளது. 5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த போன் வெளிவரும். ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.30,000-க்கு கீழ் விவோ டி4 ப்ரோ 5ஜி போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo T4 Pro 5G India launch Date, price, specifications reveled online: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X