Home
Mobile

அமேசான் அதிருது.. ரூ.3000 டிஸ்கவுண்ட்.. 6500mAh பேட்டரி, 90W சார்ஜிங், 50MP OIS கேமர, IP69 கொண்ட VIVO 5G போன்!

விவோ நிறுவனம் ஏப்.15 ஆம் தேதியன்று இந்தியாவில் அதன் புதிய ஸ்மார்ட்போன் ஆன விவோ டி5 ப்ரோ 5ஜி (Vivo T5 Pro 5G) மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. அறிமுகத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், விவோ டி5 ப்ரோ 5ஜி-யின் விலை மற்றும் அதன் முக்கிய அம்சங்கள் குறித்த புதிய லீக் வெளியாகி உள்ளது. உடனே விவோ டி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை டக்கென்று குறைந்துள்ளது.

நினைவூட்டும் வண்ணம் விவோ டி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்தியாவில் ரூ.27,999 க்கு அறிமுகமானது. பிளிப்கார்ட்டில் இன்னமும் இது அதே அறிமுக விலைக்கு தான் வாங்க கிடைக்கிறது. ஆனால் அமேசான் இந்தியா வலைத்தளமானது, இதே ஸ்டோரேஜ் ஆப்ஷனை ரூ.27,475 க்கு பட்டியலிட்டுள்ளது. கூடவே ரூ.2500 வரையிலான கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட்டையும் வழங்குகிறது.

ரூ.3000 டிஸ்கவுண்ட்.. 6500mAh பேட்டரி கொண்ட VIVO 5ஜி போன்!

அதாவது தற்போது அமேசானில், விவோ டி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு ரூ.524 நேரடி விலைக்குறைப்பும், ரூ.2500 பேங்க் ஆபரும் என மொத்தம் ரூ.3000 க்கு மேலான தள்ளுபடி கிடைக்கிறது. ஆனால் இந்த ஆபர் விலை (ரூ.27475) விவோ டி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் நைட்ரோ ப்ளூ கலர் ஆப்ஷன் மீது மட்டுமே கிடைக்கிறது.

விவோ டி4 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் குவாட்-கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளே
- 1080 × 2392 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 5000 நிட்ஸ் லோக்கல் பீக் ப்ரைட்னஸ்
- 1500 நிட்ஸ் க்ளோபல் பீக் ப்ரைட்னஸ்

- ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட் (Snapdragon 7 Gen 4 SoC)
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி IMX882 பிரைமரி சென்சார்
- 3எக்ஸ் ஜூம் ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி IMX882 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா
- 2-மெகாபிக்சல் பொக்கே கேமரா
- 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா

- ஏஐ ப்ரொபெஷனல் போர்ட்ரெயிட்
- ஏஐ ஏரேஸ் 3.0
- ஏஐ மேஜிக் மூவ்
- ஏஐ இமேஜ் எக்ஸ்பாண்டர்
- ஏஐ போட்டோ என்ஹான்ஸ்
- IP68 மற்றும் IP69 ரேட்டிங்
- இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- வெப்பச் சிதறலுக்கான 16,470 சதுர மிமீ 10-அடுக்கு வீசி கூலிங் சிஸ்டம்
- 90W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6500mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி

- ப்ரீ-இன்ஸ்டால்டு கூகுள் ஜெமினை ஆப்
- ஜெமினி லைவ் மற்றும் பிற ஏஐ அம்சங்கள்
- ஏஐ கேப்ஷன்ஸ்
- ஏஐ ஸ்மார்ட் கால் அசிஸ்டண்ட்
- ஏஐ ஸ்பேம் கால் ப்ரொடெக்ஷன்
- 5ஜி, 4ஜி, வைஃபை 6, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி ஆதரவு
- அளவீட்டில் 7.53 மிமீ தடிமன்
- எடையில் 192 கிராம்

ஏப்ரல் 15 அறிமுகமாகும் விவோ டி5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம்: டிப்ஸ்டர் சஞ்சு சௌத்ரியின் கூற்றுப்படி, இந்த்ஸ் ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.30,000 ஆக இருக்கலாம். மேலும் 12ஐபி ரேம் + 256ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.36,999 வரை செல்லலாம். இருப்பினும் விவோ நிறுவனம் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக கருத்து எதையும் தெரிவிக்கவில்லை

ஆனால் அந்த ஸ்மார்ட்போனுக்கான பிளிப்கார்ட் பக்கத்தில் உள்ள சிறிய எழுத்துக்களை படிக்கும்போது, இந்த விலை உண்மை என்று தெரிகிறது. விவோ நிறுவனத்தின் மார்க்கெட்டிங் நிபந்தனைகளை வெளிப்படுத்தும் குறிப்புகளில் ஒன்று - இந்த போனின் விலை ரூ. 37,000 க்கு கீழ் இருக்கும் என்று குறிப்பிடுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo T4 Pro 5G gets Discount in Amazon Just ahead Vivo T5 Pro 5G India launch on April 15
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X