Home
Mobile

வெறும் ரூ.9,499 பட்ஜெட் 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. அறிமுகமானது புது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தனது புதிய விவோ டி4 லைட் 5ஜி (Vivo T4 Lite 5G) ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஐபி64 ரேட்டிங், 6000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

விவோ டி4 லைட் 5ஜி அம்சங்கள் (vivo T4 Lite 5G specifications): 6.74-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய விவோ டி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 1600×720 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அறிமுகமானது புது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

அக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300) சிப்செட் வசதியுடன் இந்த விவோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த புதிய போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஃபன்டச்ஓஎஸ் 15 (FuntouchOS 15) ) மூலம் இந்த விவோ டி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் எடை 202 கிராம் ஆகும்.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த விவோ டி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா இந்த போனில் உள்ளன. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) கொண்டுள்ளது இந்த விவோ டி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன். 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack), டாப் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Top Ported Speakers) உள்ளிட்ட வசதிகள் இந்த போனில் உள்ளன. அதேபோல் IP64 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust and splash resistant) ஆதரவும் இந்த போனில் உள்ளன.

6000mAh பேட்டரி மற்றும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இந்த போனில் உள்ளன. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.4இ ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உடன் விவோ டி4 லைட் 5ஜி போன் வெளிவந்தது. பிரிசம் ப்ளூ (Prism Blue) மற்றும் டைட்டானியம் கோல்ட் ( Titanium Gold) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

அறிமுகமானது புது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட விவோ டி4 லைட் 5ஜி போனின் விலை ரூ.9,999-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.10,999 விலையிலும், 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.12,999 விலையிலும் வாங்க முடியும்.

ஜூலை 2-ம் தேதி முதல் பிளிப்கார்ட், விவோ இந்தியா ஆன்லைன் ஸ்டோர் தளங்களில் விவோ டி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.9,499 விலையில் வாங்கிவிட முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
vivo T4 Lite launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X