VIVO-வின் வசூல் வேட்டை.. ரூ.9999 க்கு 5ஜி, 6000mAh பேட்டரி, 2TB மெமரி.. ஜூன் 24 அறிமுகம்.. என்ன மாடல்?
விவோ (Vivo) நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன் (Budget 5G Smartphone) ஒன்று அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அது என்ன மாடல்? சரியாக எந்த தேதியில் அறிமுகம் ஆகும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? விவோ நிறுவனம் அதன் விவோ டி சீரிஸ்-ன் கீழ் விவோ டி4 லைட் 5ஜி (Vivo T4 Lite 5G) மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. இது கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்ட விவோ டி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் அப்கிரேடெட் வெர்ஷன் ஆக இருக்கும்.

எப்போது அறிமுகம்? விவோ டி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூன் 24 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு (நண்பகல்) அறிமுகம் செய்யப்படும் என்று விவோ நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டை டீஸ் செய்வதற்காக விவோ தனது இந்திய வலைத்தளத்தில் ஒரு பிரத்யேக வலைப்பக்கத்தையும் உருவாக்கியுள்ளது.
வெளியீட்டு தேதி உடன் சேர்த்து விவோ டி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட்டுடன் வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது மற்றும் இது 1000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.74 இன்ச் டிஸ்பிளேவையும் கொண்டிருக்கும். இது 6,000 எம்ஏஎச் பேட்டரியுடன் வரும் என்றும் டீஸ் செய்யப்பட்டுள்ளது. அறிமுகத்திற்கு பின் பிளிப்கார்ட் மூலம் வாங்க கிடைக்கும்.

விவோ டி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- TÜV Rheinland லோ ப்ளூ லைட் சான்றிதழ்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- டூயல் சிம் ஆதரவு
- 2டிபி வரை ஸ்டோரேஜ் விரிவாக்கம்
- 6000mAh பேட்டரி
விவோ டி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு வரும்? இது 6000mAh பேட்டரி உடன் ரூ.10,000 விலை பிரிவில் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று விவோ நிறுவனம் கூறுகிறது. இந்த ஸ்மார்ட்போன், இந்த வார தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐக்யூ இஸட்10 லைட் 5ஜி (iQOO Z10 Lite 5G) ஸ்மார்ட்போனுடன் சில அம்சங்களை பகிர்ந்து கொள்வதாகத் தெரிகிறது.

ஐக்யூ இஸட்10 லைட் 5ஜி மாடல் ரூ.9,999 க்கு (4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ்) வாங்க கிடைக்கிறது. ஆக விவோ டி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனும் இதேபோன்ற விலைக்கு வர அதிக வாய்ப்புள்ளது. சரியான விலை விவரங்கள் மற்றும் அறிமுக சலுகைகள் ஜூன் 24 அன்று நடக்கும் வெளியீட்டில் வெளிப்படுத்தப்படும்.
முன்னதாக அறிமுகமான விவோ டி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை, விவோ டி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.56-இன்ச் எச்டி பிளஸ் (1612 x 720 பிக்சல்ஸ்) எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 840நிட்ஸ் tபீக் ப்ரைட்னஸையும் வழங்குகிறது.
ப்ராசஸரை பொறுத்தவரை, இது 6என்எம் ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (6nm octa-core MediaTek Dimensity 6300 SoC) உடன் வருகிறது. இது 6ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. விர்ச்சுவல் ரேம் அம்சம் வழியாக இந்த ஸ்மார்ட்போனின் ரேம்-ஐ கிட்டத்தட்ட 6ஜிபி வரை அதிகரிக்கலாம்.
கேமராக்களை பொறுத்தவரை, விவோ டி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இதில் ஏஐ-ஆதரவு கொண்ட 50-மெகாபிக்சல் பிரைமரி சென்சார் மற்றும் 2-மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளன. முன்பக்கத்தை பொறுத்தவரை, டிஸ்பிளேவில் உள்ளவாட்டர் டிராப் நாட்ச்சில் 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா வைக்கப்பட்டுள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி64 மதிப்பீட்டுடன் வருகிறது.


Click it and Unblock the Notifications