என்னங்க சொல்றீங்க.. வெறும் ரூ.9,499-க்கு 5G போன்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்திய ஸ்மார்ட்போன் பிரியர்கள் மூக்கில் விரல் வைக்கும்படியான அடிமட்ட பட்ஜெட்டில் 6000mAh பேட்டரியை கொடுத்தது மட்டுமல்லாமல், 50 எம்பி கேமரா, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், 1 டிபி மெமரி சப்போர்ட் போன்ற பீச்சர்களுடன் விவோ டி4 லைட் 5ஜி (Vivo T4 Lite 5G) போன் வெளியாகியது. இந்த கம்மியான பட்ஜெட்டிலும் பேங்க் டிஸ்கவுண்ட் போக இப்போது, மேலும் அடிமட்ட விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. இந்த விவோ டி4 லைட் 5ஜி போனின் விவரங்கள் இதோ.
விவோ டி4 லைட் 5ஜி பிளிப்கார்ட் விற்பனை (Vivo T4 Lite 5G Flipkart Sale): 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.9,999ஆக இருக்கிறது. இது ஆரம்ப விலை மாடலாகும். மேலும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.10,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.12,999ஆகவும் இருக்கிறது.

இந்த மூன்று வேரியண்ட்களும் இப்போது விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த விலையிலும் ரூ.500 உடனடி டிஸ்கவுண்ட் போக ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் எஸ்பிஐ கிரெடிட் கார்டு மற்றும் எச்டிஎப்சி கிரெடிட் கார்டுகளுக்கு கிடைக்கிறது. ஆகவே, 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டை ரூ.9,499 பட்ஜெட்டில் வாங்கலாம்.
இந்த விவோ டி4 லைட் 5ஜி போனில் 2 கலர்கள் கிடைக்கின்றன. ஆகவே, பிரிசம் ப்ளூ (Prism Blue) மற்றும் டைட்டானியம் கோல்டு (Titanium Gold) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த விலைக்கு 6000mAh பேட்டரி மட்டுமல்லாமல், கேமரா, சிப்செட் போன்ற மற்ற பீச்சர்களிலும் பட்டையை கிளப்புகிறது. அதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
விவோ டி4 லைட் 5ஜி அம்சங்கள் (Vivo T4 Lite 5G Specifications): இந்த விவோ போனில் 6000mAh பேட்டரி மட்டுமல்லாமல், அதை ஓரளவுக்கு வேகமாக சார்ஜ் செய்து கொள்ள 15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. இதுவொரு குவாலிட்டியான மாடலாக இருக்கிறது. ஏனென்றால், MIL-STD-810H சர்டிபிகேஷனுடன் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்கிறது.
இதுபோக IP64 ரேட்டிங் மூலம் பட்ஜெட்டிலும் டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. அதேபோல 50 எம்பி மெயின் கேமராவை சோனி சென்சாருடன் கொடுத்துள்ளது. இந்த கேமராவுக்கு 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 5 எம்பி செல்பீ ஷூட்டர் சர்போர்ட் கிடைக்கிறது. இந்த லைட் மாடலில் ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) பேஸ்டு ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கிடைக்கிறது.
இந்த ஓஸ் மூலம் லேட்டஸ்ட் யுஐ பீச்சர்கள் மட்டுமல்லாமல், பட்ஜெட்டைவிட கூடுதல் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் கிடைக்கிறது. 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் பெற்று கொள்ளலாம்.
மேலும், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மைக்ரோ எஸ்டி கார்டு சிலாட், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டாப்-போர்டெட் ஸ்பீக்கர் போன்ற பட்ஜெட் பீச்சர்களை பார்க்க முடிகிறது. மேலும், சைடு-பேசிங் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், 5ஜி மற்றும் டூயல் 4ஜி கனெக்விட்டி கொடுக்கப்படுக்கிறது.


Click it and Unblock the Notifications








