அடிச்சு தூக்குது ஆர்டர்.. ரூ.9,449 போதும்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 15W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் நடக்கும் ஃப்ரீடம் சேல் 2025 (Freedom Sale 2025) சலுகையில் அடிமட்ட விலைக்கு விவோ டி4 லைட் 5ஜி (Vivo T4 Lite 5G) போன் கிடைக்கிறது. 6000mAh பேட்டரி, 15W சார்ஜிங் மட்டுமல்லாமல், சோனி ஏஐ கேமரா, மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த விவோ டி4 லைட் 5ஜி போனுக்கு கிடைக்கும் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் ரூ.10,000 பட்ஜெட்டுக்கும் கீழ் அதிக பேட்டரி கேபாசிட்டி கொண்ட மாடல்களில் இந்த விவோ டி4 லைட் 5ஜி போனுக்கு தனியிடம் இருக்கிறது. ஏனென்றால், பேட்டரி மட்டுமல்லாமல், இந்த பட்ஜெட்டில் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் டிஸ்பிளே, IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ், சோனி சென்சாருடன் கேமராவை கொடுக்கிறது.

மொத்தம் மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.9,999ஆகவும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.10,999ஆகவும் இருக்கிறது. மேலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ.12,999ஆக உள்ளது. இப்போது, பிளிப்கார்ட் ஃப்ரீடம் சேலில் டிஸ்கவுண்ட் வருகிறது.
ஆகவே, 4 ஜிபி ரேம் மாடலுக்கு ரூ.500 டிஸ்கவுண்ட், 6 ஜிபி ரேம் மாடலுக்கு ரூ.550 டிஸ்கவுண்ட் மற்றும் 8 ஜிபி ரேம் மாடலுக்கு ரூ.650 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இது பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.9,449 பட்ஜெட்டில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலை வாங்கி கொள்ள முடியும். இந்த பட்ஜெட்டில் பீச்சர்கள் எப்படி வருகிறது.
விவோ டி4 லைட் 5ஜி அம்சங்கள் (Vivo T4 Lite 5G Specifications): இந்த பட்ஜெட்டிலும் பர்ஃபாமென்ஸ் கொடுப்பதில் குறை சொல்லமுடியாத அளவுக்கு ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் 5ஜி (Octa Core MediaTek Dimensity 6300 6nm 5G) சிப்செட் மற்றும் லேட்டஸ்ட் யுஐ அனுபவம் கொடுக்கும்படி ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது.
ஏஐ கேமரா பீச்சர்களுடன் ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆட்டோ போகஸ் மற்றும் சோனி சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இதற்கு 2 எம்பி பொக்கெ கேமரா சப்போர்ட் மற்றும் 5 எம்பி செல்பீ ஷூட்டர் கேமரா கிடைக்கிறது. நான்கு லெலவ் அட்ஜஸ்ட்மெண்ட் கொடுக்கும்படி ஃபிளாஷ்லைட் பேக் செய்துள்ளது.
சூப்பர் நைட் மோட் (Super Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) போன்ற மோட்கள் மட்டுமல்லாமல், ஏஐ எரைஸ் (AI Erase), ஏஐ போட்டோ என்ஹான்ஸ் (AI Photo Enhance), ஏஐ அல்ட்ரா எச்டி டாக்குமெண்ட் (Ultra HD Document) மற்றும் ஏஐ ஸ்கிரீன் டிரான்லேஷன் (Al Screen Translation) போன்ற பீச்சர்களையும் கொடுத்து இருக்கிறது. 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த விவோ டி4 லைட் 5ஜி போனில் 6000mAh பேட்டரி மற்றும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. பிரீமியம் லுக் கொடுக்கும்படியான ப்ரிசம் ப்ளூ (Prism Blue) அல்லது டைட்டானியம் கோல்டு (Titanium Gold) கலர்களில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








