சிட்டாக பறக்கும் ஆர்டர்.. 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. ஆஃபரில் விவோ 5ஜி போன்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் விவோ டி4 லைட் 5ஜி (vivo T4 Lite 5G) ஸ்மார்ட்போன் ஆனது தற்போது சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஐபி64 ரேட்டிங், 50எம்பி கேமரா, 6000எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ டி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலுக்கு 28 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

விவோ டி4 லைட் 5ஜி அம்சங்கள் (vivo T4 Lite 5G specifications): சக்திவாய்ந்த ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300) சிப்செட் வசதியுடன் இந்த விவோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த புதிய போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல 6.74-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய விவோ டி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 1600×720 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஃபன்டச்ஓஎஸ் 15 (FuntouchOS 15) மூலம் இந்த விவோ டி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் எடை 202 கிராம் ஆகும்.
இந்த விவோ டி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா இந்த போனில் உள்ளன. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
குறிப்பாக 6000mAh பேட்டரி மற்றும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இந்த போனில் உள்ளன. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.4இ ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உடன் விவோ டி4 லைட் 5ஜி போன் வெளிவந்தது. பிரிசம் ப்ளூ (Prism Blue) மற்றும் டைட்டானியம் கோல்ட் ( Titanium Gold) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.
IP64 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust and splash resistant) ஆதரவு இந்த போனில் உள்ளன. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) கொண்டுள்ளது இந்த விவோ டி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன். 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack), டாப் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Top Ported Speakers) உள்ளிட்ட வசதிகள் இந்த போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications








