இப்ப வாங்குங்க ப்ரோ.. ரூ.12,349 ரேட்ல வருது 6000mAh பேட்டரி ஸ்மார்ட்போன்.. கூடவே 16GB ரேம்.. 50MP கேமரா!
பிளிப்கார்ட் தளத்தில் விவோ வி4 லைட் 5ஜி (Vivo T4 Lite 5G) ஸ்மார்ட்போனுக்கு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் 16 ஜிபி ரேம் மட்டுமல்லாமல், 6000mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50 எம்பி மெயின் கேமரா கொடுக்கிறது. ஆகவே, இப்போது வாங்கினால் சீப்பான விலையில் ஆர்டர் செய்து கொள்ளலாம். வாங்குவதற்கு முன்பாக அந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
விவோ பிரியர்கள் மட்டுமல்லாமல், பட்ஜெட் விலையில் அதிக பேட்டரி கேபாசிட்டி எதிர்பார்க்கும் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கும் இந்த விவோ வி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் பக்கா தேர்வாக இருக்கும். ஏனென்றால், 6000mAh பேட்டரியுடன் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுத்து இருக்கிறது. இதனால் கேமிங் மற்றும் ஓடிடி விரும்பிகளுக்கு அதிக பேக்கப் கிடைக்கும்.

இந்த பேட்டரி மட்டுமல்லாமல், அதிக டியூரபிலிட்டி கொண்ட மாடலாகவும் இந்த விவோ இருக்கிறது. அதாவது, நின்றுக்கொண்டிருக்கும்போது உங்களது கையில் இருந்து கீழே விழுந்தாலும் டிராப் ரெசிஸ்டன்ட் கொடுக்கும்படி மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி வருகிறது. இதற்காக கொடுக்கப்படும் MIL-STD-810H என்றும் சர்டிபிகேஷனை பெற்றுள்ளது. ஆகவே, பட்ஜெட்டில் ரக்கட் மாடலாக இருக்கிறது.
அதே நேரத்தில் டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கொடுக்க IP64 ரேட்டிங் பெற்றுள்ளது. இதனால், ஒட்டுமொத்தமாகவே பில்ட் குவாலிட்டி பட்ஜெட்டைவிட கூடுதலாக அவுட்புட் கொடுக்கிறது. மூன்றாவதாக இந்த விவோ டி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் சிப்செட் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இந்த விலைக்கு பக்கா 5ஜி சிப்செட்டை பேக் செய்துள்ளது.
ஆகவே, நல்ல பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கும்படி மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் கொடுக்கிறது. இந்த மூன்று முக்கிய பீச்சர்களும் இதில் பிளஸ்-ஆக இருக்கின்றன. முழு பீச்சர்களை தெரிந்து கொள்வதற்கு முன்னதாக இந்த விவோ வி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.12,999ஆக இருக்கிறது. இதுவே பட்ஜெட் விலையாக இருப்பதால், விற்பனையில் சக்கைப்போடு போட்டது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.650 உடனடி டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது. இது மொத்த விலையில் இருந்து 5 சதவீதமாக இருக்கிறது.
சொல்லப்போனால், இந்த விவோ வி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனானது, ரூ.9,999 ஆரம்ப விலையிலேயே கிடைக்கிறது. ஆனால், அதில் வெறும் 4 ஜிபி ரேம் மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஆகவே, பர்ஃபாமென்ஸ் நன்றாக இருக்க வேண்டுமானால், 8 ஜிபி ரேம் வேரியண்ட்டுக்கு செல்வது நல்லது. அதிலும் இதன் 8 ஜிபி ரேம் வேரியண்ட்டில் 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் கிடைக்கிறது.
ஆகவே, 16 ஜிபிக்கான ரேம் பர்ஃபாமென்ஸை இதில் பெற்று கொள்ளலாம். ஒருவேளை மலிவு விலை மட்டுமே இருந்தால் போதும், பர்ஃபாமென்ஸ் ஓரளவுக்கு வேண்டுமானால், 4 ஜிபி ரேம் வேரியண்ட்டை ஆர்டர் செய்து கொள்ளுங்கள். இப்போது, இந்த விவோ டி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் கிடைக்கும் மற்ற பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
இதில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் மற்றும் ஃபன்டச் ஓஎஸ் 15 கிடைக்கிறது. 6.74 இன்ச் எல்டி பேனல் கொண்ட டிஸ்பிளே வருகிறது. இதில் எச்டி பிளஸ் ரெசொலூஷன், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா உள்ளது. 5 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள், சைடுஃபிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளது.


Click it and Unblock the Notifications