அடுத்த Vivo 5ஜி போன் ரெடி.. 50எம்பி கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 256ஜிபி மெமரி.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
விவோ நிறுவனத்தின் புதிய விவோ டி4 (Vivo T4) டீசர் தற்போது பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் வெளியாகி உள்ளது. எனவே இந்த புதிய ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். மேலும் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே மற்றும் வழக்கமாக கொடுக்கப்படும் 44W சார்ஜிங் வசதிக்கு பதிலாக புதிய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த விவோ டி4 போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக விவோ டி4 ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே ஆன்லைனில் கசிந்த இந்த விவோ டி4 ஸ்மார்ட்போனின அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

விவோ டி4 5ஜி அம்சங்கள் (Vivo T4 5G Specifications): ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் (Snapdragon 7s Gen 3 chipset) வசதியுடன் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) பேஸ்டு ஆண்ட்ராய்டு 15 ஒஎஸ் (Android 15) மூலம் இந்த போன் இயங்கும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
அதேபோல 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் இந்த போனில் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது.
6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (FHD+ AMOLED display) உடன் இந்த விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1800 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
7300mAh பேட்டரி உடன் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும், அதேசமயம் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

OIS ஆதரவு கொண்ட 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் இந்த புதிய விவோ போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
குறிப்பாக 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) போன்ற வசதியும் விவோ டி4 5ஜி போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் எடை 195 கிராம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய விவோ போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








