Home
Mobile

வெறித்தனமா இருக்கே.. புது Vivo போன்.. 7300mAh பேட்டரி, 50MP சோனி கேமரா, 8.1 மிமீ ஸ்லிம், 90W சார்ஜிங், 5G!

லேட்டஸ்ட் ஆக இந்தியாவில் அறிமுகமாகி செம்ம ஹிட் அடித்துள்ள விவோ டி4எக்ஸ் 5ஜி மாடலை தொடர்ந்து விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன், கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்?

மைஸ்மார்ட்ப்ரைஸ் (MySmartPrice) வழியாக கிடைத்த சமீபத்திய அறிக்கையின்படி, விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட்டை பெறும் என்றும். இது 8,20,000 க்கும் அதிகமான AnTuTu ஸ்கோரை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5,000 நிட்ஸ் வரையிலான லோக்கல் பீக் ப்ரைட்னஸ் உடன் கூடிய குவாட்-கர்வ்டு AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

புது Vivo போன்.. 7300mAh பேட்டரி, 50MP சோனி கேமரா, 5G!

முன்னதாக வெளியான லீக்ஸ் வழியாக கிடைத்த தகவல்களின்படி விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை இடம்பெறலாம்?
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் புல் எச்டி பிளஸ் டிஸ்பிளே
- சர்குலர் ரியர் கேமரா செட்டப்
- OIS உடன் 50 மெகாபிக்சல் சோனி IMX882 ப்ரைமரி சென்சார்
- 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார்
- 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா

- ஐஆர் பிளாஸ்டர்
- பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 8.1 மிமீ தடிமன் மற்றும் 195 கிராம் எடை
- ஆண்ட்ராய்டு 15-அடிப்படையிலான பன்டச் ஓஎஸ் 15
- 90W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 7,300mAh பேட்டரி

விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்? இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? சமீபத்திய அறிக்கையின்படி, விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் இந்த மாத இறுதிக்குள், அதாவது ஏப்ரல் மாத இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். இந்த ஸ்மார்ட்போனின் விலை விவோ டி3 5ஜி மாடலை போலவே இருக்கலாம்.

நினைவூட்டும் வண்ணம் விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் மற்றும் 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் என்கிற 2 ஆப்ஷன்களின் கீழ் முறையே ரூ.19 ,999 மற்றும் ரூ.21,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆக விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது, எப்படி பார்த்தாலும் ரூ.20,000 முதல் ரூ.25,000 க்குள் என்கிற விலையில் தான் இருக்கும்.

புதிய விவோ டி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (Vivo T4x 5G Specifications Features):
- பிளாஸ்டிக் பாடி
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங்
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.72-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்
- லைவ் டெக்ஸ்ட், சர்க்கிள் டு சர்ச் மற்றும் ஏஐ ஸ்கிரீன் டிரான்ஸ்லேஷன் போன்ற ஸ்மார்ட் அம்சங்கள்

- டூயல் கேமரா செட்டப்
- 50எம்பி ப்ரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார்
- 8எம்பி செல்பீ கேமரா
- ஏஐ ஏரேசர் உட்பட பல ஏஐ கேமரா அம்சங்கள்
- 30 fps இல் 4K வீடியோ ரெக்கார்டிங்
- பெரிய 6,500mAh பேட்டரி
- 44W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

புதிய விவோ டி4எக்ஸ் 5ஜி விலை மற்றும் விற்பனை விவரங்கள் (Vivo T4x 5G Price, Sale Date in India): 6ஜிபிரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.13,999, 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.14,999 மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.16,999. இது மெரைன் ப்ளூ (Marine Blue) மற்றும் ப்ரோடான் பர்பிள் (Proton Purple) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Vivo T4 5G with 7300mAh Battery Under Rs 25000 Budget to Launch in India this Month Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X