Home
Mobile

மொத்த மார்கெட்டும் காலி.. பட்ஜெட்ல 7300mAh பேட்டரி.. 90W ஃபாஸ்ட் சார்ஜிங்.. BYBASS சார்ஜிங்.. எந்த மாடல்?

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் 7000mAh பேட்டரிக்கு மேல் கேபாசிட்டி கொடுக்கும் மாடல்கள் போட்டிப்போட்டு களமிறங்க தொடங்கிவிட்டன. ரூ.19,999 பட்ஜெட்டில் 7300mAh பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட முதல் மாடலாக ஐக்யூ இசட்10 5ஜி போன் வெளியாகியது. இப்போது, அதே 7300mAh பேட்டரி, 90W சார்ஜிங் மட்டுமல்லாமல், கூடுதலாக ஃபைபாஸ் சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட மாடலாக விவோ டி4 5ஜி (Vivo T4 5G) வெளியாக இருக்கிறது. இதுகுறித்த முழு விவரங்கள் இதோ.

விவோ இந்தியா நிறுவனமானது, ஏப்ரல் 22ஆம் தேதி விவோ டி4 5ஜி போனை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்தது. இந்த போன் அதிகப்படியான பேட்டரி கேபாசிட்டி கொண்ட மாடலாகவும், அதே நேரத்தில் ஸ்லிம் மாடலாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 7300mAh பேட்டரியுடன் இந்த போன் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்ததன.

மொத்த மார்கெட்டும் காலி.. பட்ஜெட்ல 7300mAh பேட்டரி.. 90W சார்ஜிங்!

ஆனால், விவோ நிறுவனம் இதை உறுதி செய்யவில்லை. இப்போது, அதிகாரப்பூர்வமாக பேட்டரி மட்டுமல்லாமல், சார்ஜிங் மற்றும் டைமன்ஷன் விவரங்களை விவோ நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஆகவே, இந்த விவோ டி4 5ஜி போனானது 7300mAh பேட்டரி மற்றும் 90W ஃபிளாஷ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட மாடலாக வெளியாக இருக்கிறது. இவ்வளவு பெரிய பேட்டரி இருந்தும் 7.89 மிமீ மட்டுமே தடிமன் கொண்டிருக்கிறது.

பைபாஸ் சார்ஜிங் (Bybass Charging) மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் (Reverse Charging) சப்போர்ட் கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்கான மாடலாக இருப்பதால், இதுபோன்ற பேட்டரி மற்றும் சார்ஜிங் பீச்சர்கள் கிடைக்கின்றன. ஏனென்றால், பைபாஸ் சார்ஜிங் மூலம் டைரக்ட் டிரைவ் பவர் சப்ளை (Direct Drive Power Supply) கிடைக்கிறது. இதன் மூலம் மதர்போர்ட்டுக்கும் பவர் சப்ளை அனுப்பப்படும்.

ஆகவே, சார்ஜிங் செய்யும்போது பேட்டரி ஹீட் கன்ட்ரோல் செய்யப்படும். அதேபோல கேமிங் விளையாடும்போது ப்ளூடூத் இயர்பட்களை எளிதாக சார்ஜிங் செய்ய ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. இதில் 7300mAh பேட்டரி கிடைப்பதால் பேக்கப் பட்டையை கிளப்பும்படி இருக்கும். பேக்கிரவுண்ட் கன்ட்ரோலுக்கு நானோ கேஜ் ஸ்ட்ரக்ச்சர் (Nano Cage Structure) டெக்னாலஜி வருகிறது.

மொத்த மார்கெட்டும் காலி.. பட்ஜெட்ல 7300mAh பேட்டரி.. 90W சார்ஜிங்!

இப்படி பேட்டரி தொடர்பான டெக்னாலஜிகள் மற்றும் பீச்சர்களை இந்த விவோ டி4 5ஜி போன் கொடுக்கிறது. எம்ரால்டு பிளேஸ் எடிஷனில் (Emerald Blaze Edition) இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. மேற்கண்ட பீச்சர்களை மட்டுமே விவோ இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. இருப்பினும், முக்கிய பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. அவற்றை இப்போது பார்ப்போம்.

விவோ டி4 5ஜி அம்சங்கள் (Vivo T4 5G Specifications): இந்த விவோ போனில் குவாட் கர்வ்ட் அமோலெட் (Quad Curved AMOLED) டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 5000 பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென்3 (Snapdragon 7s Gen 3) சிப்செட் கிடைக்க இருக்கிறது. 32 எம்பி செல்பீ ஷூட்டர் மற்றும் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.

மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் மற்றும் ஓஐஎஸ் டெக்னாலஜி (OIS Technology) வருகிறது. 2 எம்பி செகண்டரி கேமரா சப்போர்ட் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களில் வெளியாக இருக்கிறது. ரூ.20,000 பட்ஜெட்டில் இந்த போன் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Best Mobiles in India

English summary
Vivo T4 5G With 7300mAh Battery 90W Charging To Launch April 22 in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X