Home
Mobile

வெச்சி செஞ்சி விட்டாங்க.. ரூ.18,799 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 7300mAh பேட்டரி.. 90W பாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் நடக்கும் பிக் பில்லியன் டேஸ் (Big Billion Days) விற்பனையில் விவோ டி4 5ஜி (Vivo T4 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. 7300mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுல்லாமல், அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார் மெயின் கேமரா போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போனின் விலை, தள்ளுபடி மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.21,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.23,999ஆகவும் இருக்கிறது. மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.25,999ஆகவும் இருக்கிறது. இந்த மார்கெட் விலையில் இருந்து ரூ.1,000 விலை குறைப்பு செய்யப்பட்டு இருக்கிறது.

வெச்சி செஞ்சி விட்டாங்க.. ரூ.18,799 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. மாடல்?

ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலானது ரூ.20,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதுபோக பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் ரூ.2,200 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடி போக ரூ.18,799 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

அதேபோல எச்டிஎப்சி கிரெடிட் கார்டுக்கு ரூ.2,000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலானது ரூ.1,000 விலை குறைப்பு மற்றும் ரூ.2,200 உடனடி தள்ளுபடி போக 20,799 பட்ஜெட்டில் கிடைக்கிறது. மேலும், 12 ஜிபி ரேம் மாடலானது அதேபோல விலை குறைப்பு மற்றும் தள்ளுபடி போக ரூ.22,799 விலைக்கு கிடைக்கிறது.

விவோ டி4 5ஜி அம்சங்கள் (Vivo T4 5G Specifications): இந்த விவோ ஸ்மார்ட்போனில் 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த 3டி கர்வ்ட் டிஸ்பிளேவுக்கு 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன் கிடைக்கிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1300 நிட்ஸ் எச்பிஎம் (HBM) மோட் கிடைக்கிறது.

வெச்சி செஞ்சி விட்டாங்க.. ரூ.18,799 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. மாடல்?

எச்டிஆர்10பிளஸ் (HDR10+) , டிராப் ரெசிஸ்டன்ட் மற்றும் ஸ்காட் ஷீல்டு கிளாஸ் புரொடெக்டன் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 3 4nm) சிப்செட் கிடைக்கிறது. இதற்கு கிடைக்கும் அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

மேலும், ஃபன்டச்ஓஎஸ் 15 (Funtouch OS 15) மட்டுமல்லாமல், ஏஐ நோட்ஸ் அசிஸ்டன்ட், சூப்பர் டாக்குமெண்ட்ஸ், சர்கிள் டூ சர்ச் போன்ற ஏஐ பீச்சர்கள் கிடைக்கிறது. இதில் அல்ட்ரா கேம் மோட், ஏஐ கேம் வாய்ஸ் சேஞ்சர் மற்றும் 4D கேம் வைப்ரேஷன் போன்ற கேமிங் பீச்சர்களும் கிடைக்கிறது. இதற்கு ஏற்ப பேட்டரி சிஸ்டம் கிடைக்கிறது.

ஆகவே, விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போனில் 7300mAh பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. மேலும், ரிவர்ஸ் சார்ஜிங் (Reverse Charging) மற்றும் ஃபைபாஸ் சார்ஜிங் (Bybass Cahrging) போன்ற கேமிங் பிரியர்களுக்கான சார்ஜிங் பீச்சர்களும் இதில் கிடைக்கின்றன. MIL-STD-810H மிலிட்டரி டியூரபிலிட்டி, IP65 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் உள்ளது.

சோனி ஐஎம்எக்ஸ்882 (SONY IMX882) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா உள்ளது. ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கொண்ட மாடலாக இருக்கிறது. 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். இன்பிராரெட் சென்சார் மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo T4 5G With 50MP Camera Sale Under Rs 19000 in Flipkart Big Billion Days Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X