Home
Mobile

மிரளுது டிஸ்கவுண்ட்.. பட்ஜெட் விலைக்கு 7300mAh பேட்டரி போன்.. 90W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி போக பட்ஜெட் விலைக்கு விவோ டி4 5ஜி (Vivo T4 5G) போன் விற்பனைக்கு வந்துள்ளது. ஒட்டுமொத்த பேட்டரி போன்களையும் தூக்கி சாப்பிடும்படி பெரிய 7300mAh பேட்டரி மட்டுமல்லாமல், 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கிறது. அதேபோல 50 எம்பி மெயின் கேமரா, அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் கொண்ட இந்த விவோ டி4 5ஜி போனின் விலை மற்றும் பீச்சர் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் அதிக பேட்டரி கேபாசிட்டி கொண்ட மாடல்களில் MIL-STD-810H சர்டிபிகேஷன் கொண்ட ஸ்மார்ட்போனாக இது இருக்கிறது. இதுபோக IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. ஆகவே, மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி மட்டும் பட்ஜெட்டுக்கு ஏற்ப ஐபி ரேட்டிங் பெற்று கொள்ளலாம். மற்ற பீச்சர்கள் கூடுதலாகவே இருக்கின்றன.

மிரளுது டிஸ்கவுண்ட்.. பட்ஜெட் விலைக்கு 7300mAh பேட்டரி போன்.. மாடல்?

விவோ டி4 5ஜி அம்சங்கள் (Vivo T4 5G Specifications): பட்டையை கிளப்பும் பர்ஃபாமென்ஸ் கொண்ட 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 (Octa Core Snapdragon 7s Gen 3 4nm) சிப்செட் கொடுக்கிறது. இந்த சிப்செட்டுக்கு கிடைக்கும் அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுக்கப்படுகிறது.

மேலும், ஃபன்டச்ஓஎஸ் 15 (Funtouch OS 15) கொடுக்கிறது. அதிக பேட்டரி கிடைக்கும் டிஸ்பிளேவில் குறைவைக்கவில்லை. ஆகவே, ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன் கொண்ட 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.

மேலும், ஓடிடி பிரியர்கள் விரும்பும்படி எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் 1300 நிட்ஸ் எச்பிஎம் (HBM) சப்போர்ட் கிடைக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்882 (SONY IMX882) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கொடுக்கிறது. இதுபோக 2 எம்பி டெப்த் கேமராவும், நைட் போட்டோகிராபிக்காக ஆரா லைட் (Aura Light) வருகிறது. ஏஐ எரைஸ், ஏஐ போட்டோ என்ஹான்ஸ் பீச்சர்கள் உள்ளன.

இதுபோக ஏஐ நோட்ஸ் அசிஸ்ட் மற்றும் சூப்பர் டாக்குமெண்ட்ஸ் போன்ற பீச்சர்களையும் இந்த விவோ டி4 5ஜி போன் கொடுக்கிறது. 4K ரெக்கார்டிங் மற்றும் 32 எம்பி செல்பீ கேமராவை கொடுக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்கள் கிடைக்கின்றன. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டும் உள்ளது.

இந்த விவோ டி4 5ஜி போனில் 7300mAh பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றுமம் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் வருகிறது. பிளிப்கார்ட் தளத்தில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.21,999ஆக இருக்கிறது. இதில் ரூ.1,500 டிஸ்கவுண்ட் போக இப்போது வாங்க கிடைக்கிறது.

இந்த டிஸ்கவுண்ட் போக ரூ.20,499 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ள முடிகிறது. இதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆகியவற்றுக்கும் ரூ.1,500 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த விவோ போனை எம்ரால்டு பிளேஸ் (Emerald Blaze) மற்றும் பாண்டம் கிரே (Phantom Grey) கலர்களில் வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo T4 5G With 50MP Camera Available At Discounted Price in Flipkart Offer Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X