நாளைக்கு லான்ச் ஆகும் இந்த Vivo 5ஜி போனுக்கு பல பேர் வெயிட்டிங்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?
விவோ (Vivo) நிறுவனம் நாளை (ஏப்ரல் 22) விவோ டி4 5ஜி (vivo T4 5G) எனும் புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக நாளை மதியம் 12 மணி அளிவில் பிளிப்கார்ட் (flipkart) தளத்தில் இந்த போன் அறிமுகமாகும். மேலும் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த விவோ போனின் முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.
விவோ டி4 5ஜி அம்சங்கள் (Vivo T4 5G Specifications): ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் (Snapdragon 7s Gen 3 chipset) வசதியுடன் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) பேஸ்டு ஆண்ட்ராய்டு 15 ஒஎஸ் (Android 15) மூலம் இந்த போன் இயங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (FHD+ AMOLED display) உடன் இந்த விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் உடன் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
குறிப்பாக 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
7300mAh பேட்டரி உடன் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக சிங்கிள் சார்ஜில் இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) வசதி விவோ டி4 5ஜி போனில் உள்ளது. மேலும் இந்த போனின் எடை 195 கிராம் என்று கூறப்படுகிறது. எமரால்டு பிளேஸ் (Emerald Blaze) மற்றும் பாண்டம் கிரே (Phantom Grey) நிறங்களில் இந்த விவோ ஸ்மார்ட்போன் வெளிவரும்.
அதேபோல் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி டைப்-சி போர்ட், மேம்பட்ட AI அம்சங்கள் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த விவோ டி4 5ஜி போன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி ரூ.25,000-க்கு கீழ் இந்த புதிய விவோ போன் அறிமுகமாகும்.


Click it and Unblock the Notifications








