Home
Mobile

வாங்குனா இந்த Vivo போன் வங்கனும்.. ஸ்னாப்டிராகன் சிப்செட்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?

விவோ நிறுவனம் விரைவில் விவோ டி4 5ஜி (Vivo T4 5G) எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் வாரங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே மற்றும் சிப்செட் குறித்த முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி 5000 நிட்ஸ் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) உடன் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போன் சிறந்த டிஸ்பிளே அனுபவத்தை வழங்கும். மேலும் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 (Snapdragon 7s Gen 3) சிப்செட் ஆதரவும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் அனைத்து ஆப்ஸ்களையும் இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம். மேலும் ஏற்கனவே ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

வாங்குனா இந்த Vivo போன் வாங்கனும்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

விவோ டி4 5ஜி அம்சங்கள் (Vivo T4 5G Specifications): 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் உடன் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இந்த போனில் உள்ளது.

6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (FHD+ AMOLED display) உடன் இந்த விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் (Snapdragon 7s Gen 3 chipset) வசதியுடன் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) பேஸ்டு ஆண்ட்ராய்டு 15 ஒஎஸ் (Android 15) மூலம் இந்த போன் இயங்கும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

அதேபோல் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

7300mAh பேட்டரி உடன் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக சிங்கிள் சார்ஜில் இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும்.

அதேபோல் ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) வசதி விவோ டி4 5ஜி போனில் உள்ளது. மேலும் இந்த போனின் எடை 195 கிராம் என்று கூறப்படுகிறது. எமரால்டு பிளேஸ் (Emerald Blaze) மற்றும் பாண்டம் கிரே (Phantom Grey) நிறங்களில் இந்த அசத்தலான விவோ ஸ்மார்ட்போன் வெளிவரும்.

Best Mobiles in India

English summary
Vivo T4 5G to be launched with Snapdragon 7s Gen 3: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X