Home
Mobile

வந்துட்டான் யா VIVO.. 7300mAh பேட்டரி, 90W சார்ஜிங் உடன் புது 5G போன்.. எந்த மாடல்? என்ன விலை?

விவோ (Vivo) நிறுவனம் கூடிய விரைவில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. இது "இந்தியாவின் மிகப்பெரிய பேட்டரியை" கொண்ட ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றுடீஸ் செய்யப்பட்டுள்ளது. என்ன மாடல்? எப்போது அறிமுகம்? என்ன்ன அம்சங்களை கொண்டிருக்கும்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? விவோ நிறுவனம் அதன் விவோ டி4 5ஜி (Vivo T4 5G) ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகத்தை டீஸ் செய்ய தொடங்கியுள்ளது. இது 5000mAh பேட்டரி மற்றும் 44W பாஸ்ட் சார்ஜிங் கொண்ட விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போனுக்கு அடுத்தபடியாக வரும் மாடலாகும்.

7300mAh பேட்டரி, 90W சார்ஜிங் உடன் புது Vivo 5G போன்!

விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போனிற்காக உருவிக்கப்பட்டுள்ள மைக்ரோசைட் வழியாக. இது பெரிய பேட்டரியை கொண்டிருப்பது மட்டுமல்லாமல், வேகமான சார்ஜிங்கையும் கொண்டிருக்கும் என்பதும் வெளிப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 90W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

விவோவின் துணை நிறுவனமான ஐக்யூ, அதன் ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனில் 7300mAh பேட்டரியை பேக் செய்துள்ளது. ஐக்யூ நிறுவனம் இதை "இந்தியாவின் மிகப்பெரிய பேட்டரி ஸ்மார்ட்போன்" என்று கூறுகிறது. தற்போது விவோ நிறுவனமும் அதையே கூறுகிறது. ஆக விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போனிலும் 7300mAh பேட்டரி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போனின் மைக்ரோசைட் ஆனது, இது குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட்டை கொண்டிருக்கும் என்பதையும் உறுதிப்படுத்துகிறது. இருப்பினும், எந்த சிப்செட் என்பதை சரியாக குறிப்பிடவில்லை. இதுதவிர்த்து விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வட்டமான மூலைகளையும், செல்பீ கேமராவிற்காக முன்பக்கத்தில் ஹோல்-பஞ்ச் கட்அவுட்டையும் கொண்டுள்ளது.

விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போனின் விலையை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் ரூ.20,000 - ரூ25,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வாங்க கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது

விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 2400 x 1080 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளேவை (AMOLED Display) கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 சிப்செட் (Octa-core MediaTek Dimensity 7200 SoC) மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 14 (Android 14) அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 14 (FuntouchOS 14) உடன் வருகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, இதில் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு (LED Flash Support) உடனான டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilisation - OIS) உடனான 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் + 2எம்பி டெப்த் சென்சாரை கொண்டுள்ளது.

விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போனின் செல்பீ கேமராவை பொறுத்தவரை, இதற்கென டிஸ்பிளேவின் மேற்புறத்தில் மையப்படுத்தப்பட்ட ஹோல்-பஞ்ச் கட்அவுட் (Centred hole-punch cutout) உள்ளது. அதில் 16எம்பி சென்சார் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 44W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை,இது 5ஜி, 4ஜி, வைஃபை 6, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை கொண்டுள்ளது. மேலும் இது தூசி மற்றும் ஸ்பிளாஷ் (Dust and splash) எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்கும் (IP54 Rating) உள்ளது. கடைசியாக இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரையும் (In-display fingerprint sensor) கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo T4 5G May Pack 7300mAh Battery Priced Under Rs 25000 Launching in India Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X