அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்ட்ல இல்லையே.. 7300mAh பேட்டரி.. சோனி கேமரா.. வருகிறது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் விவோ டி4எக்ஸ் 5ஜி (Vivo T4x 5G)ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது விவோ நிறுவனம். இந்நிலையில் மீண்டும் ஒரு அசத்தலான போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம். அதன்படி விவோ டி4 5ஜி (Vivo T4 5G) எனும் ஸ்மார்ட்போனை தான் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது விவோ நிறுவனம்.
ஆன்லைனில் வெளியான தகவலின்படி வரும் ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் தற்போது ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களையும் இப்போது பார்க்கலாம்.

விவோ டி4 5ஜி அம்சங்கள் (Vivo T4 5G Specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (FHD+ AMOLED display) உடன் இந்த விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1800 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரமான ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் (Snapdragon 7s Gen 3 chipset) வசதியுடன் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) பேஸ்டு ஆண்ட்ராய்டு 15 ஒஎஸ் (Android 15) மூலம் இந்த போன் இயங்கும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
குறிப்பாக 7300mAh பேட்டரி உடன் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும், அதேசமயம் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
OIS ஆதரவு கொண்ட 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் இந்த புதிய விவோ போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் இந்த போனில் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது.
ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) வசதியும் விவோ டி4 5ஜி போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் எடை 195 கிராம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.20,000 பட்ஜெட்டில் இந்த புதிய விவோ டி4 5ஜி போன் இந்தியாவில் அறிமுகமாகும். இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த விவோ போன்.


Click it and Unblock the Notifications








