Home
Mobile

ஏப்ரல் 22-ல் பெரிய சம்பவம் இருக்கு.. சோனி கேமரா.. 7300mAh பேட்டரி.. இந்திய மார்க்கெட் அதிரும்.. எந்த மாடல்?

விவோ (vivo) நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் விவோ டி4 5ஜி (vivo T4 5G) எனும் புதிய ஸ்மார்ட்போனை வரும் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது விவோ நிறுவனம்.

அதாவது வரும் ஏப்ரல் 22-ம் தேதி விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதுவும் பிளிப்கார்ட் (flipkart) தளத்தில் ஏப்ரல் 22-ம் தேதி மதியம் 12 மணி அளவில் விவோ டி4 5ஜி போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே ஆன்லைனில் வெளியான இந்த விவோ போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஏப்ரல் 22-ல் பெரிய சம்பவம் இருக்கு.. சோனி கேமரா.. எந்த மாடல்?

விவோ டி4 5ஜி அம்சங்கள் (Vivo T4 5G Specifications): 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (FHD+ AMOLED display) உடன் இந்த விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் உடன் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

தரமான ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் (Snapdragon 7s Gen 3 chipset) வசதியுடன் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) பேஸ்டு ஆண்ட்ராய்டு 15 ஒஎஸ் (Android 15) மூலம் இந்த போன் இயங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக 7300mAh பேட்டரி உடன் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக சிங்கிள் சார்ஜில் இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) வசதி விவோ டி4 5ஜி போனில் உள்ளது. மேலும் இந்த போனின் எடை 195 கிராம் என்று கூறப்படுகிறது. எமரால்டு பிளேஸ் (Emerald Blaze) மற்றும் பாண்டம் கிரே (Phantom Grey) நிறங்களில் இந்த விவோ ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் இந்த புதிய விவோ போன் ரூ.25,000-க்குள் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

Best Mobiles in India

English summary
vivo T4 5G india launch date revealed: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X