Home
Mobile

இதுதான் புதிய Vivo 5ஜி போன்.. 7300mAh பேட்டரி.. சோனி கேமரா.. என்ன விலை? எப்போது அறிமுகம்?

விவோ (vivo) நிறுவனம் அடுத்து விவோ டி4 5ஜி (Vivo T4 5G) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது புதிய விவோ போன் இந்த ஏப்ரல் மாதம் இறுதிக்குள் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போனின் படங்கள் தற்போது ஆன்லைனில் வெளியாகி உள்ளது.

அதன்படி பெரிய வட்ட வடிவ கேமரா அமைப்புடன் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதுவும் டூயல் ரியர் கேமரா இதில் உள்ளன. குறிப்பாக எமரால்டு பிளேஸ் (Emerald Blaze) மற்றும் பாண்டம் கிரே (Phantom Grey) நிறங்களில் விவோ டி4 5ஜி போன் விற்பனைக்கு வரும். மேலும் ஏற்கனவே ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

இதுதான் புதிய Vivo 5ஜி போன்.. 7300mAh பேட்டரி, சோனி கேமரா.. என்ன விலை?

விவோ டி4 5ஜி அம்சங்கள் (Vivo T4 5G Specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (FHD+ AMOLED display) உடன் இந்த விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1800 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் (Snapdragon 7s Gen 3 chipset) வசதியுடன் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) பேஸ்டு ஆண்ட்ராய்டு 15 ஒஎஸ் (Android 15) மூலம் இந்த போன் இயங்கும்.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது. பின்பு இந்த போனின் பாதுகாப்பு வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

அதேபோல் 7300mAh பேட்டரி உடன் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W அல்லது 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக சிங்கிள் சார்ஜில் இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும்.

ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) வசதி விவோ டி4 5ஜி போனில் உள்ளது. மேலும் இந்த போனின் எடை 195 கிராம் என்று கூறப்படுகிறது. ஆன்லைனில் கசிந்த தகவலின்படி ரூ.20,000-இல் இருந்து ரூ.25,000-க்குள் இந்த புதிய விவோ போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு இருக்கும்.

photo credit: 91mobiles

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo T4 5G images and specifications leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X