இன்றே கடைசி.. 7300mAh பேட்டரி.. சோனி கேமரா.. 90W சார்ஜிங்.. ஆஃபரில் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் தற்போது பிளிப்கார்ட் குடியரசு தின சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனை இன்று மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் இந்த சிறப்பு விற்பனையில் தரமான விவோ டி4 5ஜி (vivo T4 5G) போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதன்படி பிளிப்கார்ட்டில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.22,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை ரூ.20999 விலையில் வாங்கிவிட முடியும்.

விவோ டி4 5ஜி அம்சங்கள் (Vivo T4 5G Specifications): 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (FHD+ AMOLED display) உடன் இந்த விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2392x1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் பல அம்சங்கள் உள்ளன.
ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் (Snapdragon 7s Gen 3 chipset) வசதியுடன் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) பேஸ்டு ஆண்ட்ராய்டு 15 ஒஎஸ் (Android 15) மூலம் இந்த போன் இயங்கும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் உடன் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் மூலம் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.
இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) வசதி விவோ டி4 5ஜி போனில் உள்ளது. மேலும் இந்த போனின் எடை 199 கிராம் ஆகும். எமரால்டு பிளேஸ் (Emerald Blaze) மற்றும் பாண்டம் கிரே (Phantom Grey) நிறங்களில் இந்த விவோ போனை வாங்க முடியும்.
7300mAh பேட்டரி உடன் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் ஒரே சார்ஜில் 2 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. MIL-STD-810H -மிலிட்டரி கிரேடு ஷாக் ரெசிஸ்டன்ஸ் ஆதரவு இந்த போனில் உள்ளது.

அதேபோல் பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported speaker), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), வசதி இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், க்ளோனாஸ், பீடோ, யூ.எஸ்.பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
குறிப்பாக IP65 டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust and splash resistant)உடன் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported speaker) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த விவோ டி4 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications








