Home
Mobile

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. வெறும் ரூ.13,999 போதும்.. 16GB ரேம்.. 50MP கேமரா.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?

விவோ பிரியர்கள் கனவிலும் நினைக்காத டிஸ்கவுண்ட் 16 ஜிபி ரேம், 50 எம்பி கேமரா, 6000mAh பேட்டரி, 44W ஃபாஸ்ட் சார்ஜிங், 120Hz டிஸ்பிளே போன்ற பீச்சர்களை கொண்ட விவோ டி3எக்ஸ் 5ஜி (Vivo T3x 5G) போனுக்கு கிடைக்கிறது. இப்போது பிளிப்கார்ட் தளத்தில் விலை குறைப்பு மட்டுமல்லாமல், பேங்க் டிஸ்கவுண்ட் போக அடிமட்ட பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த விவோ டி3எக்ஸ் 5ஜி போனின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

விவோ டி3எக்ஸ் 5ஜி புது விலை பிளிப்கார்ட் (Vivo T3x 5G New Price Flipkart): இந்த விவோ போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.13,499 ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.14,999 ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.16,499 ஆகவும் இருந்தது.

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. வெறும் ரூ.13,999 போதும்.. 16GB ரேம்.. மாடல்?

ஆனால், இப்போது நேரடியாக விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, 4 ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலை ரூ.12,499 ஆகவும், 6 ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலை ரூ.13,999 ஆகவும், 8 ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலை ரூ.15,499 ஆகவும் இருக்கிறது. மேலும், ரூ.1,500 பேங்க் டிஸ்கவுண்ட் போக இப்போது விற்பனைக்கு கிடைக்கிறது.

ஆகவே, பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) மூன்று ரேம் வேரியண்ட்களில் எதை ஆர்டர் செய்தாலும், ரூ.1,500 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படும். ஆகவே, 4 ஜிபி ரேம் வேரியண்ட்டை ரூ.10,999 பட்ஜெட்டிலும், 6 ஜிபி ரேம் வேரியண்ட்டை ரூ.12,499 பட்ஜெட்டிலும், 8 ஜிபி வேரியண்ட்டை ரூ.13,999 பட்ஜெட்டிலும் வாங்கி கொள்ளலாம்.

விவோ டி3எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Vivo T3x 5G Specifications): இந்த விவோ போன் பட்ஜெட்டிலும் பக்கா பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் விதமாக ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 எஸ்ஓசி (Octa Core 4nm Snapdragon 6 Gen 1 SoC) சிப்செட் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் மாலி ஜிபியு (Mali GPU) கிராபிக்ஸ் கார்டு மட்டுமே எதிர்பார்க்க முடியும்.

ஆனால், இந்த விவோ போனில் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. அதேபோல ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மட்டுமல்லாமல் ஃபன்டச்ஓஎஸ் 14 (FuntouchOS 14) கிடைக்கிறது. 128 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், மூன்று வேரியண்ட்களிலும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் உள்ளது.

டிஸ்பிளே பட்ஜெட்டுக்கு ஏற்ப எல்சிடி (LCD) பேனலில் கிடைக்கிறது. 6.72 இன்ச் (2408 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. மேலும், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இந்த விவோ டி3எக்ஸ் 5ஜி போனில் 50 எம்பி மெயின் + 2 எம்பி டெப்த் வருகிறது.

ஆனால், 8 ஜிபி ரேம் வேரியண்ட்டில் மட்டுமே 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ கேமரா உள்ளது. இந்த டி3எக்ஸ் போனில் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6000mAh பேட்டரி வருகிறது. 3.5 ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், IP64 தர டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளன. ஆகவே, பட்ஜெட்டில் பக்கா 5ஜி ஆப்ஷனாக இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo T3x 5G With 50MP Camera Gets Price Cut Sale From Flipkart Check Specifications New Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X