Home
Mobile

கொஞ்சம் பொறுங்க.. ரூ.15,000 போதும்.. புதிய 5ஜி போனை இந்தியாவுக்கு கொண்டு விவோ.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்த விவோ டி2எக்ஸ் போனுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் விவோ டி2எக்ஸ் போனுக்கு அடுத்து விவோ எடி3எக்ஸ் 5ஜி எனும் ஸ்மார்ட்போனையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது விவோ நிறுவனம்.

அதாவது தற்போது வெளியான தகவலின்படி, இந்த ஏப்ரல் மாதம் இறுதியில் விவோ டி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 19 அல்லது ஏப்ரல் 22-ம் தேதி இந்த புதிய விவோ டி3எக்ஸ் 5ஜி போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய 5ஜி போனை இந்தியாவுக்கு கொண்டு விவோ.. எந்த மாடல்?

விவோ டி3எக்ஸ் 5ஜி (Vivo T3x 5G) ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.15,000-க்குள் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த போன் 5ஜி ஆதரவுடன் மேம்பட்ட புதிய அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஆனாலும் இந்த போனின் அம்சங்கள் தற்போது வெளியிடப்படவில்லை. கூடிய விரைவில் இந்த போனின் அம்சங்கள் வெளியிடப்படும். மேலும் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட விவோ டி2எக்ஸ் 5ஜி போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

விவோ டி2எக்ஸ் 5ஜி அம்சங்கள் ( vivo T2x 5G specifications): 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி (FHD+ LCD) டிஸ்பிளே வசதியுடன் விவோ டி3எக்ஸ் 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 2408 × 1080 பிக்சல்ஸ், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

மீடியாடெக் டைமன்சிட்டி 6020 (Dimensity 6020) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ டி2எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். பின்பு ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதள வசதியுடன் இந்த விவோ டி2எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவோ டி2எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் வெளிவந்துள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும் இந்த போன். பின்பு 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதிஇ சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி bokeh கேமரா சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ டி2எக்ஸ் 5ஜி . எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தெளிவான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும்இ வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன்.

புதிய 5ஜி போனை இந்தியாவுக்கு கொண்டு விவோ.. எந்த மாடல்?

விவோ டி2எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த இந்த போனில் எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போனின் எடை 184 கிராம் ஆகும்.

5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக அனைத்துசிறப்பு அம்சங்களுடன் ரூ.11,999 விலையில் வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Vivo T3x 5G will be launched in India by the end of April: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X