காத்திருப்பு ஓவர்.. 6000mAh பேட்டரி.. Snapdragon சிப்செட்.. வருகிறது புது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ டி3எஸ் 5ஜி ஸ்மார்ட்போனை வரும் ஏப்ரல் 22-ம் தேதிக்குள் அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த புதிய விவோ விவோ டி3எஸ் 5ஜி போன் ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் விவோ டி3எக்ஸ் 5ஜி போன் ரூ.15,000 க்குள் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் விவோ டி3எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் தற்போது ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

விவோ டி3எஸ் 5ஜி அம்சங்கள் (Vivo T3x 5G specifications): சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் (Snapdragon 6 Gen 1 chipset) வசதியுடன் இந்த விவோ டி3எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.
6000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த விவோ டி3எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கிடைக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
குறிப்பாக ஃபுல் எச்டி டிஸ்பிளே, 50எம்பி ரியர் கேமரா, 8ஜிபி ரேம், 256ஜிபி மெமரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த அசத்தலான விவோ டி3எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த விவோ டி2எக்ஸ் 5ஜி போனின் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
விவோ டி2எக்ஸ் 5ஜி அம்சங்கள் (vivo T2x 5G specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6020 (Dimensity 6020) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ டி2எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன். ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதள வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
இந்த விவோ டி2எக்ஸ் 5ஜி போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி bokeh கேமரா சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
விவோ டி2எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் வெளிவந்துள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது விவோ டி2எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த இந்த போனில் எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போனின் எடை 184 கிராம் ஆகும். 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.
குறிப்பாக 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி (FHD+ LCD) டிஸ்பிளே வசதியுடன் விவோ டி3எக்ஸ் 5ஜி போன் வெளிவந்தது. மேலும் 2408 × 1080 பிக்சல்ஸ், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. தற்போது விவோ டி2எக்ஸ் 5ஜி போன் ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications