ஆர்டர் போட்ருங்க.. வெறும் ரூ.12,999 போதும்.. 50MP கேமரா.. 6000mAh பேட்டரி.. ஆஃபரில் Vivo 5ஜி போன்..
பிளிப்கார்ட் தளத்தில் விவோ டி3எக்ஸ் 5ஜி (vivo T3x 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் ஐபி64 ரேட்டிங், ஸ்னாப்டிராகன் சிப்செட், 50எம்பி கேமரா மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்தது. இப்போது விவோ டி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் விவோ டி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 22 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.13,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடி வழங்கப்படும். எனவே இந்த போனை ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

விவோ டி3எக்ஸ் 5ஜி அம்சங்கள் (vivo T3x 5G Specifications): 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (Full HD+) டிஸ்பிளே கொண்டுள்ளது விவோ டி3எக்ஸ் 5ஜி போன். 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Snapdragon 6 Gen 1) சிப்செட் வசதியுடன் இந்த விவோ டி3எக்ஸ் 5ஜி போன்வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஃபன்டச் ஓஎஸ் 14 (FuntouchOS 14) மூலம் இயங்குகிறது இந்த அட்டகாசமான விவோ போன். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
இந்த விவோ போன் எப்/1.8 அபெக்ஷர் கொண்ட 50 மெகாபிக்சல் மெயின் சென்சார் + எப்/2.4 அபெக்ஷர் கொண்ட 2 மெகாபிக்சல் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. மேலும் இந்த போனின் உதவியுடன் அட்டகாசமான படங்களை எடுக்க முடியும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த போன்.
அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த விவோ டி3எக்ஸ் 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. குறிப்பாக தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங் கொண்டுள்ளது இந்த விவோ போன்.

குறிப்பாக 6000எம்ஏஎச் பேட்டரியுடன் (6000mAh battery) இந்த விவோ டி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (44W fast charging) வசதியும் உள்ளது.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) கொண்டுள்ளது இந்த போன். 5ஜி (5G), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 6 802.11 ஏஎக்ஸ் (Wi-Fi 6 802.11 ax), புளூடூத் 5.1 (Bluetooth 5.1), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.


Click it and Unblock the Notifications








