Home
Mobile

வெளுத்துக் கட்டும் பிளிப்கார்ட்.. 6000mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. ஆஃபரில் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

சியோமி, மோட்டோ, ஒப்போ நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் விவோ நிறுவனம் அறிமுகம் செய்யும் போன்கள் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் விவோ டி3எக்ஸ் 5ஜி (vivo T3x 5G) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ டி3எக்ஸ் 5ஜி போனுக்கு 28 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

வெளுத்துக் கட்டும் பிளிப்கார்ட்.. ஆஃபரில் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ டி3எக்ஸ் 5ஜி அம்சங்கள் (vivo T3x 5G Specifications): 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (Full HD+) டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த விவோ டி3எக்ஸ் 5ஜி போன். இதன் டிஸ்பிளேவில் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

விவோ டி3எக்ஸ் 5ஜி போன் 50 மெகாபிக்சல் மெயின் சென்சார் + 2 மெகாபிக்சல் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த விவோ போனில் உள்ளன.

ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Snapdragon 6 Gen 1) சிப்செட் வசதியுடன் இந்த விவோ டி3எக்ஸ் 5ஜி போன் வெளிவந்தது. மேலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஃபன்டச் ஓஎஸ் 14 (FuntouchOS 14) மூலம் இயங்குகிறது இந்த விவோ போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங் கொண்டுள்ளது இந்த விவோ டி3எக்ஸ் 5ஜி போன். டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன். 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த விவோ டி3எக்ஸ் 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

6000mAh பேட்டரியுடன் வெளிவந்துள்ளது விவோ டி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (44W fast charging) வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனின் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

அதேபோல் 5ஜி (5G), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 6 802.11 ஏஎக்ஸ் (Wi-Fi 6 802.11 ax), புளூடூத் 5.1 (Bluetooth 5.1), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) கொண்டுள்ளது விவோ டி3எக்ஸ் 5ஜி போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
vivo T3x 5G is available at 28 percent discount in Flipkart sale: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X