ரூ.17499 க்கு பதில் ரூ.10999.. புதுசு வருதுனு அடிமட்ட விலைக்கு இறங்கிய பழைய மாடல்! VIVO-வின் 6000mAh 5ஜி போன்!
விவோ நிறுவனத்தின் வி சீரீஸ் (Vivo V Series) ஸ்மார்ட்போன்கள் மிட்-ரேன்ஜ் வாசிகளின் செல்லப்பிள்ளை என்றால்.. விவோவின் டி சீரீஸ் (Vivo T Series) ஆனது பட்ஜெட் வாசிகளின் செல்லப்பிள்ளை ஆகும். கடைசியாக விவோ டி3 சீரிஸின் கீழ் அறிமுகமான எல்லா ஹிட்டு மாடல்களுமே ஹிட்டு தான். குறிப்பாக விவோ டி3எக்ஸ் 5ஜி (Vivo T3X 5G) ஸ்மார்ட்போன்!
தற்போது இந்த ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் வெர்ஷன் ஆன விவோ டி4எக்ஸ் 5ஜி (Vivo T4X 5G) ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பிஐஎஸ் (BIS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தரநிலைகள் பணியகம் (Bureau of Indian Standards) இணையதளத்தில் காணப்பட்ட்டுள்ளதால், இது எப்போது வேண்டுமானலும் அறிமுகம் செய்யப்படலாம்; எப்படி பார்த்தாலும் இது 2025 மார்ச் மாதத்திற்குள் அறிமுகமாகி விடும்.

புதிய மாடலின் அறிமுகம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பழைய விவோ டி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது, பிளிப்கார்ட் (Flipkart) வழியாக தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. தற்போது விவோ டி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது, அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.17,499 க்கு பதிலாக 28% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.12,499 க்கு வாங்க கிடைக்கிறது.
மேலும் இந்த மாடலின் மீது அனைத்து வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் கீழும் ரூ.1500 தள்ளுபடியும் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படியாக விவோ டி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் இறுதி ஆபர் விலையை (Final Offer Price) ரூ.10,999 க்கு கொண்டுவர முடியும்.
விவோ டி3எக்ஸ் 5ஜி-யின் விரிவான அம்சங்கள்: டூயல் சிம் (நானோ-சிம்) ஆதரவுடன் வரும் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஃபன்டச் ஓஎஸ் 14 மூலம் இயங்குகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை, 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.72-இன்ச் எஃப்எச்டி எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
ப்ராசஸரை பொறுத்தவரை இது 4என்எம் அடிப்படையிலான ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி வரையிலான LPDDR4X ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான UFS 2.2 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் எக்ஸ்டென்டட் ரேம் 3.0 அம்சத்தின்கீழ் பில்ட்-இன் ரேம்-ஐ மேலும் 8ஜிபி வரை விரிவாக்க முடியும். மறுகையில் உள்ள இன்டர்னல் ஸ்டோரேஜை, மைக்ரோஎஸ்டி கார்டு வழியாக 1டிபி வரை விரிவாக்க முடியும்.
கேமராக்களை பொறுத்தவரை, இதில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் எப்f/1.8 அபெக்ஷர் கொண்ட 50 மெகாபிக்சல் மெயின் சென்சார் + எப்/2.4 அபெக்ஷர் கொண்ட 2 மெகாபிக்சல் சென்சார் உள்ளன. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக, முன்பக்கத்தில் எப்/2.05 அபெர்க்ஷர் உடனான 8 மெகாபிக்சல் செல்பீ கேமராவும் உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை, விவோ டி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான பெரிய 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. விவோ நிறுவனத்தின் கூற்றுப்படி இதை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 68 மணிநேரம் வரையிலான ஆன்லைன் மியூசிக் பிளேபேக் டைம்-ஐ வழங்கும்.
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங் மற்றும் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. ஒட்டுமொத்தமாக விவோ டி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில், இன்னமும் நம்பி வாங்கக்கூடிய ஒரு நல்ல ஸ்மார்ட்போனாகும்!


Click it and Unblock the Notifications








