Home
Mobile

நம்பவே முடியல.. ரூ.3000 தள்ளுபடி.. Vivo 5ஜி போனை வாங்க சரியான நேரம்.. சோனி கேமரா.. எந்த மாடல்?

விவோ டி3 அல்ட்ரா (Vivo T3 Ultra) ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் (flipkart) தளத்தில் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக 6.78 இன்ச் டிஸ்பிளே, 50எம்பி செல்பி கேமரா, 5500mAh பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த விவோ போன் வெளிவந்தது இப்போது விவோ டி3 அல்ட்ரா போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் அம்சங்களைப் பார்க்கலாம்.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ டி3 அல்ட்ரா ஸ்மார்ட்போனுக்கு 16 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.29,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.3000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த விவோ ஸ்மார்ட்போனை ரூ.26999 விலையில் வாங்கிவிட முடியும்.

நம்பவே முடியல.. ரூ.3000 தள்ளுபடி.. Vivo 5ஜி போனை வாங்க சரியான நேரம்..

விவோ டி3 அல்ட்ரா அம்சங்கள் (Vivo T3 Ultra Specifications): 6.78 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 480ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர்10+ (HDR10+) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஆக்டா கோர் டைமன்சிட்டி 9200 பிளஸ் 4 என்எம் (Octa Core Dimensity 9200+ 4nm) சிப்செட் கொண்டுள்ளது இந்த விவோ டி3 அல்ட்ரா போன். எனவே இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் இந்த டைமன்சிட்டி சிப்செட்.

விவோ டி3 அல்ட்ரா போனில் இம்மார்டலிஸ் ஜி715 ஜிபியு (Immortalis G715 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம். ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) அடிப்படையாக கொண்டு இந்த விவோ போன் வெளிவந்தது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

50 எம்பி மெயின் சோனி ஐஎம்எக்ஸ்921 சென்சார் (SONY IMX921 Sensor) + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது இந்த போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இதில் உள்ளது. அதேபோல் ஓஐஎஸ் டெக்னாலஜி (OIS Technology), ஜீஸ் ஆப்டிக்ஸ் (ZEISS Optics) சப்போர்ட், 4K வீடியோ ரெக்கார்டிங் உள்ளிட்ட பல சிறப்பான கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

நம்பவே முடியல.. ரூ.3000 தள்ளுபடி.. Vivo 5ஜி போனை வாங்க சரியான நேரம்..

5500mAh பேட்டரி உடன் விவோ டி3 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவந்தது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் ஐபி68 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு மதிப்பீட்டை (IP68 water and dust resistance rating) கொண்டுள்ளது இந்த அட்டகாசமான விவோ ஸ்மார்ட்போன்.

இதுதவிர ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டைப்-சி ஆடியோ உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்தது. குறிப்பாக லூனார் கிரே (Lunar Gray), ஃப்ரோஸ்ட் கிரீன் (Frost Green) நிறங்களில் விவோ டி3 அல்ட்ரா ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
vivo T3 Ultra with 8GB RAM price slashed on Flipkart: check new price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X