யாரு சாமி அவன்.. ரூ.3000 டிஸ்கவுண்ட்.. பட்ஜெட்ல SONY கேமரா.. 3D டிஸ்பிளே.. 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) ரூ.3000 அறிமுக சலுகையுடன் 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார் மற்றும் ஓஐஎஸ் டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, ஆட்டோ போகஸ் சப்போர்ட் கொண்ட 50 எம்பி செல்பீ கேமரா, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5500mAh பேட்டரி போன்ற பக்கா பீச்சர்களுடன் விவோ டி3 அல்ட்ரா (Vivo T3 Ultra) விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த விவோ போனின் விற்பனை தேதி, முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் இதோ.
விவோ டி3 அல்ட்ரா அம்சங்கள் (Vivo T3 Ultra Specifications): இந்த விவோ போனில் 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.78 இன்ச் (2800 × 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. 3டி கர்வ்ட் டிசைனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 480Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

மேலும், எச்டிஆர்10+ (HDR10+) சப்போர்ட் வருகிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. இந்த விவோ டி3 அல்ட்ரா போனில் டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) வருகிறது.
மிட்-பிரீமியம் போன்களில் கிடைக்கும் ஆக்டா கோர் டைமன்சிட்டி 9200 பிளஸ் 4 என்எம் (Octa Core Dimensity 9200+ 4nm) சிப்செட் பேக் செய்யப்பட்டுள்ளது. கேமிங் பிரியர்களுக்கு பட்டையை கிளப்பும் அவுட்புட் கொடுக்கும் இம்மார்டலிஸ் ஜி715 ஜிபியு (Immortalis G715 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
விவோவில் வழக்கமாக கிடைக்கும் ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) வருகிறது. மேலும், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த விவோ டி3 அல்ட்ரா போனானது, கேமராவில் தட்டித்தூக்கி இருக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்921 சென்சார் (SONY IMX921 Sensor) கொண்ட 50 எம்பி ரியர் கேமரா உள்ளது.
இந்த கேமராவில் ஓஐஎஸ் டெக்னாலஜி (OIS Technology) மற்றும் ஜீஸ் ஆப்டிக்ஸ் (ZEISS Optics) சப்போர்ட் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் வருகிறது. மெயின் கேமராவுடன் 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது. அதேபோல 50 எம்பி ஆட்டோபோகஸ் (Autofocus) செல்பீ கேமரா வருகிறது.
இந்த விவோ டி3 அல்ட்ரா போனில் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5500mAh பேட்டரி வருகிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டைப்-சி ஆடியோ மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் வருகிறது. மேலும், IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. 7.58 மிமீ தடிமன் கொண்டிருக்கிறது.
லூனார் கிரே (Lunar Gray), ஃப்ரோஸ்ட் கிரீன் (Frost Green) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. இந்த போனின் 8 ஜபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 31,999 ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.35,999 ஆகவும் இருக்கிறது. ரூ.3000 உடனடி டிஸ்கவுண்ட் உடன் விற்பனைக்கு வர இருக்கிறது.
எச்டிஎப்சி மற்றும் எஸ்பிஐ பேங்க் கார்டுகளை பயன்படுத்தி இந்த டிஸ்கவுண்ட்டை பெற்று கொள்ளலாம். வரும் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது. பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் விவோ.காம் (vivo.com) தளங்களில் ஆர்டர் செய்துகொள்ளலாம். ஆகவே, ரூ.28,999 பட்ஜெட்டில் இந்த போனை வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications