இதுதான் டிஸ்கவுண்ட்.. ரூ.7,000 ரேட் கட்ல SONY கேமரா.. 3D டிஸ்பிளே.. 5500mAh பேட்டரி.. 8GB ரேம்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் புதிதாக ஒரு ஸ்மார்ட்போன் வெளியாக இருந்தால், அதற்கு முந்தைய மாடலின் விலை நம்ப முடியாதபடி குறைகிறது. இப்போது, ரூ.7,000 கம்மியான விலையில் சோனி சென்சார் கேமரா, 3டி கர்வ்ட் டிஸ்பிளே, 5500mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட விவோ டி3 அல்ட்ரா (Vivo T3 Ultra) போன் கிடைக்கிறது. இதில் விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் அடங்குகிறது. இந்த விவோ போனின் மார்கெட் விலை மற்றும் டிஸ்கவுண்ட் விலையை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் ஜூன் 11ஆம் தேதி விவோ டி4 அல்ட்ரா போன் வெளியாக இருக்கிறது. பிரீமியம் கேமரா பீச்சர்களுடன் களமிறங்க இருக்கும் இந்த போனின் விலை ரூ.40,000 பட்ஜெட்டில் இருக்கப் போகிறது. இந்த போனின் வெளியீடு காரணமாக விவோ டி3 அல்ட்ரா போனுக்கு ரூ.4,000 விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. ரூ.3000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

விவோ டி3 அல்ட்ரா புது விலை (Vivo T3 Ultra New Price): இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.31,999ஆக இருக்கிறது. இப்போது, விவோ மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் தளத்தில் ரூ.27,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. ஆகவே, நேரடியாக ரூ.4,000 விலை குறைப்பில் வாங்கி கொள்ளலாம். கூடுதலாக ரூ.3,000 பேங்க் டிஸ்கவுண்ட்டை பெறலாம்.
இந்த பேங்க் டிஸ்கவுண்ட்டானது, எஸ்பிஐ, எச்டிஎப்சி மற்றும் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.7,000 விலை கம்மியான இப்போது ஆர்டர் செய்து கொள்ள முடியும். இதேபோல ரூ.33,999 மார்கெட் விலை கொண்ட 8 ஜிபி ரேம் + 256 மெமரி மாடலானது, இப்போது, ரூ.4000 விலை குறைப்பு மற்றும் ரூ.3000 டிஸ்கவுண்ட் போக ரூ.26,999 பட்ஜெட்டில் வருகிறது.
மேலும், ரூ.35,999 விலை கொண்ட 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலானது, ரூ.4000 விலை குறைப்பு, ரூ.3,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.28,999 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது. இந்த ரூ.3,000 பேங்க் டிஸ்கவுண்ட்டானது, ஈஎம்ஐ மூலம் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கும் பொருந்தும். ரூ.29,950 மதிப்பில் பழைய போன்களை எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ளலாம்.
இந்த விலை குறைப்பு மற்றும் டிஸ்கவுண்ட் ஜூன் 30ஆம் தேதி வரையில் மட்டுமே கிடைக்கும் என்று விவோ நிறுவனம் தெரிவிக்கிறது. ஆகவே, அந்த தேதிக்கு பிறகு சலுகை விலையில் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளது. இந்த மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் என்னென்ன பீச்சர்களை இந்த விவோ டி3 அல்ட்ரா போன் பேக் செய்துள்ளது என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
விவோ டி3 அல்ட்ரா அம்சங்கள் (Vivo T3 Ultra Specifications): இந்த போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9200+ 4என்எம் (Octa Core Dimensity 9200+ 4nm) சிப்செட் கிடைக்கிறது. ஆனால், ஜூன் 11ஆம் தேதி வெளியாக இருக்கும் விவோ டி4 அல்ட்ரா போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300பிளஸ் (Octa Core MediaTek Dimensity 9300+) கிடைக்க இருக்கிறது.
80W ஃபாஸ்ட் சார்ஜிங், 5500mAh பேட்டரி வருகிறது. டி4 அல்ட்ராவில் 90W சார்ஜிங் கிடைக்க இருக்கிறது. 6.78 இன்ச் (2800 x 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மற்றும் 3டி கர்வ்ட் டிசைன் கிடைக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்921 சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா, 8 எம்பி டெலிபோட்டோ கிடைக்கிறது. 50 எம்பி செல்பீ ஷூட்டர், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் வருகிறது.


Click it and Unblock the Notifications








