போட்றா ஆர்டர.. ரூ.2000 விலை குறைப்பு.. 3டி டிஸ்பிளே.. OIS கேமரா.. 80W சார்ஜிங்.. 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?
3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, ஓஐஎஸ் கேமரா, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 5500mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் வெளியான விவோ டி3 அல்ட்ரா (Vivo T3 Ultra) போனுக்கு நேரடியாக ரூ.2000 விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த போனின் விலை என்ன? முழு பீச்சர்கள் எப்படி? உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் வெளியானபோது, இந்த விவோ டி3 அல்ட்ரா போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.31,999 ஆக இருந்தது. அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.33,999 ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.35,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த மார்கெட் விலையில் இருந்து ரூ.2,000 நேரடி விலை குறைப்பு செய்யப்பட்டு இருக்கிறது. ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலை ரூ.29,999 பட்ஜெட்டிலும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலை ரூ.31,999 பட்ஜெட்டிலும் வாங்கலாம். அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலை ரூ.33,999 பட்ஜெட்டில் வாங்கலாம்.
இந்த விலை குறைப்பு போக கிரெடிட் கார்டுகளுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட்டும் வருகிறது. ஆகவே, விவோ தளத்தில ரூ.3000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் எச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ பேங்க் கார்டுகளுக்கு கொடுக்கப்படுகிறது. மேலும், 6 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ கொடுக்கப்படுகிறது.
அதேபோல மாணவர்களுக்கு ரூ.300 டிஸ்கவுண்ட் கூடுதலாக கிடைக்கிறது. இதேபோல பிளிப்கார்ட் போன்ற ஈ-காமர்ஸ் தளங்களிலும் விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு இந்த போனின் என்னென்ன பீச்சர்கள் கிடைக்கிறது? என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
விவோ டி3 அல்ட்ரா அம்சங்கள் (Vivo T3 Ultra Specifications): இந்த அல்ட்ரா மாடலில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9200+ 4என்எம் (Octa Core Dimensity 9200+ 4nm) சிப்செட் கிடைக்கிறது. இந்த சிப்செட்டுக்கு ஏற்ப இம்மார்டலிஸ் ஜி715 ஜிபியு (Immortalis G715 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஃபன்டச்ஓஎஸ் 14 (Funtouch OS 14) கிடைக்கிறது.
3டி கர்வ்ட் டிசைன் மற்றும் 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.78 இன்ச் (2800 x 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 480Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் அவுட்டேரிலும் பக்கா அவுட்புட் கொடுக்கும்படி 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.
50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. மெயின் கேமராவில் ஜீஸ் ஆப்டிக்ஸ், ஓஐஎஸ் டெக்னாலஜி மற்றும் சோனி ஐஎம்எக்ஸ்921 சென்சார் கிடைக்கிறது. செல்பீ ஷூட்டரில் 4K வீடியோ ரெக்கார்டிங் + ஆட்டோ போகஸ் சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த விவோ டி3 அல்ட்ரா போனில் 5500mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. லூனார் கிரே அல்லது ப்ரோஸ்ட் கிரீன் ஆகிய கலர்களில் ஆர்டர் செய்யலாம். பிரீமியம் லுக் கொடுக்கும்படி ஆரா எல்இடி கிடைக்கிறது. மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் பிரீமியம் மாடலாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








