தரமான செய்கை.. 50எம்பி கேமரா.. 80W சார்ஜிங்.. Vivo போன்களுக்கு சத்தமின்றி விலைகுறைப்பு.. எந்த மாடல்?
இந்தியாவில் விவோ டி3 அல்ட்ரா (Vivo T3 Ultra) மற்றும் விவோ டி3 ப்ரோ (Vivo T3 Pro) ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த இரண்டு போன்களும் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்தன. இப்போது இந்த இரண்டு விவோ போன்களின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட விவோ டி3 அல்ட்ரா போன் முன்பு ரூ.31,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது இதன் விலை குறைக்கப்பட்டு ரூ.29,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.31,999 விலையிலும், 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.33,999 விலையிலும் வாங்க முடியும்.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட விவோ டி3 ப்ரோ ஸ்மார்ட்போன் முன்பு ரூ.24,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த போனுக்கு விலைகுறைக்கபபட்டு ரூ.22,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட விவோ டி3 ப்ரோ மாடல் ரூ.26,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த மாடலுக்கு விலை குறைக்கப்பட்டு ரூ.24,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
விவோ டி3 அல்ட்ரா அம்சங்கள் (Vivo T3 Ultra Specifications): 6.78 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 480Hz டச் சாம்பிளிங் ரேட், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர்10+ (HDR10+) சப்போர்ட் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
ஆக்டா கோர் டைமன்சிட்டி 9200 பிளஸ் 4 என்எம் (Octa Core Dimensity 9200+ 4nm) சிப்செட் கொண்டுள்ளது இந்த விவோ டி3 அல்ட்ரா போன். மேலும் மேலும் இந்த போனில் இம்மார்டலிஸ் ஜி715 ஜிபியு (Immortalis G715 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது.
சோனி ஐஎம்எக்ஸ்921 சென்சார் (SONY IMX921 Sensor) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது இந்த போன். மேலும் 50எம்பி செல்பி கேமரா, 5500mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளிட்ட பல அம்சங்கள் விவோ டி3 அல்ட்ரா போனில் உள்ளன.

விவோ டி3 ப்ரோ அம்சங்கள் (Vivo T3 Pro Specifications): 6.77 இன்ச் 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே இந்த போனில் உள்ளது. மேலும் இந்த டிஸ்பிளேவில் வெட் டச் டெக்னாலஜி (Wet Touch Technology), 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 3 4nm) சிப்செட், 50எம்பி சோனி டூயல் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, 5500mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங்(Fast Charging) சப்போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த விவோ டி3 ப்ரோ போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications








